முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் கட்சியை அரசியல் ரீதியாக பாதிக்கும் என்பதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் சரத் பொன்சேகா கட்சி தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் கட்சித் தவிசாளர் பதவியிலிருந்து சரத் பொன்சேகா நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் தலைமை குறித்து சரத் பொன்சேகா அண்மைக் காலமாக கடுமையான விமர்சனங்களை பொது வெளியில் வெளியிட்டு வருகின்றார்.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் சரத் பொன்சேகா பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரத் பொன்சேகாவின் பதவிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து. முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் கட்சியை அரசியல் ரீதியாக பாதிக்கும் என்பதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மிக விரைவில் சரத் பொன்சேகா கட்சி தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.முதலில் கட்சித் தவிசாளர் பதவியிலிருந்து சரத் பொன்சேகா நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் தலைமை குறித்து சரத் பொன்சேகா அண்மைக் காலமாக கடுமையான விமர்சனங்களை பொது வெளியில் வெளியிட்டு வருகின்றார்.அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் சரத் பொன்சேகா பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.