• Nov 22 2024

மக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்டவர் எனக்கு அரசமைப்பு குறித்து கற்பிக்கப்போகின்றாரா? ரணிலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர்

Chithra / Oct 31st 2024, 1:40 pm
image


பொதுமக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட, தனது தொகுதியில் பலமுறை தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனக்கு அரசமைப்பு குறித்து கற்பிக்கவேண்டுமா என பிரதமர் ஹரிணி அமரசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தலில் 17 முறை தோல்வியடைந்த போதிலும் ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறுகின்றார் இல்லை. தொடர்ந்தும் தனது அரசியல் வாழ்க்கையில் தொங்கிக் கொண்டிருக்கின்றார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மக்கள் மாறிவிட்டார்கள்  தன்னை நிராகரித்துவிட்டார்கள்  என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பொதுமக்களின் ஆணையே அரசமைப்பின் அடிப்படை. இதனை புரிந்துகொள்ளாத ஒருவர் எனக்கு எப்படி அரசமைப்பு குறித்து கற்பிக்க முடியும்?

அரசமைப்பினை நன்கறிந்த ஒருவர் தேர்தல்களை ஒத்திவைக்கமாட்டார், தேசிய பேரவை நீதித்துறையின் தீர்மானங்களில் தலையிடமாட்டார்,

எனக்கு அரசமைப்பினை கற்பிப்பது என்றால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும் என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தங்களிற்கு அனைத்தும் தெரியும், ஏனையவர்களிற்கு எதுவும் தெரியாது என நினைத்து செயற்பட்ட தலைவர்களாலேயே இலங்கை அழிந்துபோனது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்டவர் எனக்கு அரசமைப்பு குறித்து கற்பிக்கப்போகின்றாரா ரணிலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் பொதுமக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட, தனது தொகுதியில் பலமுறை தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனக்கு அரசமைப்பு குறித்து கற்பிக்கவேண்டுமா என பிரதமர் ஹரிணி அமரசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.தேர்தலில் 17 முறை தோல்வியடைந்த போதிலும் ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறுகின்றார் இல்லை. தொடர்ந்தும் தனது அரசியல் வாழ்க்கையில் தொங்கிக் கொண்டிருக்கின்றார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.மக்கள் மாறிவிட்டார்கள்  தன்னை நிராகரித்துவிட்டார்கள்  என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.பொதுமக்களின் ஆணையே அரசமைப்பின் அடிப்படை. இதனை புரிந்துகொள்ளாத ஒருவர் எனக்கு எப்படி அரசமைப்பு குறித்து கற்பிக்க முடியும்அரசமைப்பினை நன்கறிந்த ஒருவர் தேர்தல்களை ஒத்திவைக்கமாட்டார், தேசிய பேரவை நீதித்துறையின் தீர்மானங்களில் தலையிடமாட்டார்,எனக்கு அரசமைப்பினை கற்பிப்பது என்றால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும் என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.தங்களிற்கு அனைத்தும் தெரியும், ஏனையவர்களிற்கு எதுவும் தெரியாது என நினைத்து செயற்பட்ட தலைவர்களாலேயே இலங்கை அழிந்துபோனது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement