• Apr 04 2025

நாட்டில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு?

Chithra / Apr 3rd 2025, 7:59 am
image

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, லிட்ரோ விற்பனையாளர்கள் பல வாரங்களாக பல பகுதிகளில் புதிய எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

லாஃப் எரிவாயு விலை உயர்வு காரணமாக லிட்ரோ எரிவாயுவை வாங்க நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த முறை லிட்ரோ எரிவாயு விலை உயர்த்தப்படாவிட்டாலும், லாஃப் தனது 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.420 உயர்த்தியுள்ளது.

அத்தோடு, 5 கிலோ சிலிண்டர் ரூ.168 அதிகரித்து ரூ.1,645 ஆக விற்பனை செய்யப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தோடு, லிட்ரோ விற்பனையாளர்கள் பல வாரங்களாக பல பகுதிகளில் புதிய எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.லாஃப் எரிவாயு விலை உயர்வு காரணமாக லிட்ரோ எரிவாயுவை வாங்க நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த முறை லிட்ரோ எரிவாயு விலை உயர்த்தப்படாவிட்டாலும், லாஃப் தனது 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.420 உயர்த்தியுள்ளது.அத்தோடு, 5 கிலோ சிலிண்டர் ரூ.168 அதிகரித்து ரூ.1,645 ஆக விற்பனை செய்யப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement