• Nov 26 2024

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு உயிர் அச்சுறுத்தலா? பொலிஸாரால் அனுப்பட்ட கடிதம்

Chithra / Sep 15th 2024, 4:16 pm
image

  

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு  பிரதி பொலிஸ்மா மா அதிபரால் சிங்களத்தில்  கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தலில் அரியநேத்திரன் மீதான மக்கள் செல்வாக்கின் நிமித்தம் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுவதால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் சந்திப்பு மற்றும் நிகழ்வுகளின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போது அந்த விடயங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கீழ் குறிப்பிட்ட பொது விடயங்களின் கீழ் அச்சுறுத்தல் உள்ளது என்றும், அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.

பிரதான வீதிகளுக்கு மிக நெருக்கமாக மேடைகளை அமைத்தல்/ மக்கள் கூட்டங்களை நடத்துதல்.

பிரமுகர் மற்றும் பிரமுகர் வாகனங்களில் மக்களை நெருங்கி செல்லல், பேசுவது, புகைப்படம் எடுத்தல்.

பொது இடங்களை கூட்டங்களுக்காக பயன்படுத்துதலால் எந்தவொரு நபருக்கும் சோதனை இன்றி உள்நுழைதல் மற்றும் வெளியேறுவதற்கான சந்தர்ப்பம் (உதாரணம்: வாரச் சந்தை)

பொதுமக்கள் சந்திப்பு, நிகழ்வுகள் மற்றும் வேறு தேவைகளுக்காக செல்லும் போது பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றாது இருத்தல். அவ்வாறான சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டுள்ள பிரமுகர் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமை தேவையான பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றல்.

பொதுமக்கள் சந்திப்பு, நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்கள் மற்றும் அடையாளம் தெரியாதவர்கள். கடும்போக்குவாதத்தில் இருப்பவர்கள், தன்னூக்க செயற்பாட்டாளர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஏதேனும் திடீர் Placement தாக்குதல்கள் நடத்தக்கூடிய வாய்ப்புகள். 



தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு உயிர் அச்சுறுத்தலா பொலிஸாரால் அனுப்பட்ட கடிதம்   எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு  பிரதி பொலிஸ்மா மா அதிபரால் சிங்களத்தில்  கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இம்முறை தேர்தலில் அரியநேத்திரன் மீதான மக்கள் செல்வாக்கின் நிமித்தம் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுவதால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்கள் சந்திப்பு மற்றும் நிகழ்வுகளின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போது அந்த விடயங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, கீழ் குறிப்பிட்ட பொது விடயங்களின் கீழ் அச்சுறுத்தல் உள்ளது என்றும், அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.பிரதான வீதிகளுக்கு மிக நெருக்கமாக மேடைகளை அமைத்தல்/ மக்கள் கூட்டங்களை நடத்துதல்.பிரமுகர் மற்றும் பிரமுகர் வாகனங்களில் மக்களை நெருங்கி செல்லல், பேசுவது, புகைப்படம் எடுத்தல்.பொது இடங்களை கூட்டங்களுக்காக பயன்படுத்துதலால் எந்தவொரு நபருக்கும் சோதனை இன்றி உள்நுழைதல் மற்றும் வெளியேறுவதற்கான சந்தர்ப்பம் (உதாரணம்: வாரச் சந்தை)பொதுமக்கள் சந்திப்பு, நிகழ்வுகள் மற்றும் வேறு தேவைகளுக்காக செல்லும் போது பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றாது இருத்தல். அவ்வாறான சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டுள்ள பிரமுகர் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமை தேவையான பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றல்.பொதுமக்கள் சந்திப்பு, நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்கள் மற்றும் அடையாளம் தெரியாதவர்கள். கடும்போக்குவாதத்தில் இருப்பவர்கள், தன்னூக்க செயற்பாட்டாளர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஏதேனும் திடீர் Placement தாக்குதல்கள் நடத்தக்கூடிய வாய்ப்புகள். 

Advertisement

Advertisement

Advertisement