• Sep 20 2024

வடகொரியாவில் இப்படி ஒரு நிலையா? அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Sharmi / Jan 25th 2023, 3:29 pm
image

Advertisement

வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் 5 நாட்களுக்கு முடக்கநிலையை அமுல்படுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

சுவாச நோய் ஒன்றின் பரவல் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வட கொரிய அரசாங்க அறிவித்தல் ஒன்றை மேற்கோள்காட்டி, தென் கொரிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொவிட்19 பற்றி இவ்வறிவித்தலில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், கொவிட் 19 மற்றும் தடிமன் ஆகியன வட கொரிய தலைநகரில் பரவி வருவதாக  தெரிவித்துள்ளது.

பியோங்யாங் மக்கள் இன்று புதன்கிழமை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வீடுகளில் இருக்க வேண்டும் எனவும், தினமும் பல தடவைகள் உடல் வெப்பநிலையை சோதிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் தற்போது மிகவும் குறைவடைந்துள்ளது. பியோங்யாங்கில் -22 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைவடைந்துள்ளது.

வட கொரியாவில் முதல் தடவையாக கொவிட்19 தொற்று ஏற்பட்டுள்ளதாக கடந்த வருடம் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது. எனினும், இந்த நோயை வெற்றிகொண்டதாக கடந்த ஆகஸ்ட் மாதம் வடகொரியா பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.



வடகொரியாவில் இப்படி ஒரு நிலையா அதிர்ச்சியில் உலக நாடுகள் வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் 5 நாட்களுக்கு முடக்கநிலையை அமுல்படுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.சுவாச நோய் ஒன்றின் பரவல் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வட கொரிய அரசாங்க அறிவித்தல் ஒன்றை மேற்கோள்காட்டி, தென் கொரிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.கொவிட்19 பற்றி இவ்வறிவித்தலில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், கொவிட் 19 மற்றும் தடிமன் ஆகியன வட கொரிய தலைநகரில் பரவி வருவதாக  தெரிவித்துள்ளது.பியோங்யாங் மக்கள் இன்று புதன்கிழமை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வீடுகளில் இருக்க வேண்டும் எனவும், தினமும் பல தடவைகள் உடல் வெப்பநிலையை சோதிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கொரிய தீபகற்பத்தில் தற்போது மிகவும் குறைவடைந்துள்ளது. பியோங்யாங்கில் -22 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைவடைந்துள்ளது.வட கொரியாவில் முதல் தடவையாக கொவிட்19 தொற்று ஏற்பட்டுள்ளதாக கடந்த வருடம் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது. எனினும், இந்த நோயை வெற்றிகொண்டதாக கடந்த ஆகஸ்ட் மாதம் வடகொரியா பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement