பலஸ்தீன நேரப்படி இன்று காலை 7 மணிக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.
தற்போது காசா பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்குகளை போர் விமானங்கள் தாக்குகின்றன என்று இஸ்ரேலிய ராணுவம் x தளத்தில் பதிவிட்டுள்ளது.
காசா பகுதி ஆக்கிரமிப்புப் படைகளால், கனரக பீரங்கிகள் மற்றும் வான்வழி குண்டுவீச்சுக்கு உட்பட்டுள்ளது. ஹஸாவினுடைய தெற்கு பகுதி முழுவதுமே இஸ்ரேலிய ட்ரான்களினுடைய நடமாட்டம் அதிகரித்து உள்ளதோடு வரவிருக்கும் மணிநேரங்களில், பிரதேசம் முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பது தெளிவாக தெரிகின்றது.
7 நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்த இந்த போர் தற்போது மீண்டும் முன்னைய பலத்தோடு ஆரம்பமாகி இருக்கிறது.
ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி இஸ்ரேலிய படைகள் தாக்குதலை மீண்டும் ஆரம்பித்து இருக்கின்றன.
இந்த நிலையில் நிரந்தர போர் நிறுத்தமே எமக்கு வேண்டும் என காசா மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
போர் நிறுத்தம் முடிவடைந்த அடுத்த நொடி காஸாவில் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்.மீண்டும் பதற்றம்.samugammedia பலஸ்தீன நேரப்படி இன்று காலை 7 மணிக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. தற்போது காசா பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்குகளை போர் விமானங்கள் தாக்குகின்றன என்று இஸ்ரேலிய ராணுவம் x தளத்தில் பதிவிட்டுள்ளது. காசா பகுதி ஆக்கிரமிப்புப் படைகளால், கனரக பீரங்கிகள் மற்றும் வான்வழி குண்டுவீச்சுக்கு உட்பட்டுள்ளது. ஹஸாவினுடைய தெற்கு பகுதி முழுவதுமே இஸ்ரேலிய ட்ரான்களினுடைய நடமாட்டம் அதிகரித்து உள்ளதோடு வரவிருக்கும் மணிநேரங்களில், பிரதேசம் முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பது தெளிவாக தெரிகின்றது. 7 நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்த இந்த போர் தற்போது மீண்டும் முன்னைய பலத்தோடு ஆரம்பமாகி இருக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி இஸ்ரேலிய படைகள் தாக்குதலை மீண்டும் ஆரம்பித்து இருக்கின்றன. இந்த நிலையில் நிரந்தர போர் நிறுத்தமே எமக்கு வேண்டும் என காசா மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.