• Jan 13 2025

இலங்கையில் கட்டப்பட்டுவரும் இஸ்ரேலிய மத நிலையங்கள்; அனுமதி வழங்கப்பட்டதா? சபையில் கேள்வி

Chithra / Jan 8th 2025, 12:15 pm
image

 

இஸ்ரேலின் தேசிய மத நிலையங்களையோ அல்லது அதற்கு நிகரான கட்டிடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் இஸ்ரேலியர்களுக்கு மத நிலையங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ கட்டுவதற்கு புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சோ அல்லது அதன் கீழ் உள்ள திணைக்களங்களோ அனுமதி வழங்கவில்லை. 

ஆனால் அவர்கள் அத்தகைய நிலையங்களை நடத்துகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. 

அது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பார்த்துள்ளோம். அவை அனுமதியுடன் நடைபெறவில்லை. எந்தவொரு தருணத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கு என்ன செய்வது என்று ஆலோசித்து வருகிறோம்.

வெளிவிவகார அமைச்சின் தலையீட்டின் ஊடாக அதனை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது என்றார். 

இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டு இஸ்ரேலிய மத நிலையங்கள் அல்லது கலாச்சார நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் கட்டப்பட்டுவரும் இஸ்ரேலிய மத நிலையங்கள்; அனுமதி வழங்கப்பட்டதா சபையில் கேள்வி  இஸ்ரேலின் தேசிய மத நிலையங்களையோ அல்லது அதற்கு நிகரான கட்டிடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதுவரையில் இஸ்ரேலியர்களுக்கு மத நிலையங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ கட்டுவதற்கு புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சோ அல்லது அதன் கீழ் உள்ள திணைக்களங்களோ அனுமதி வழங்கவில்லை. ஆனால் அவர்கள் அத்தகைய நிலையங்களை நடத்துகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பார்த்துள்ளோம். அவை அனுமதியுடன் நடைபெறவில்லை. எந்தவொரு தருணத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கு என்ன செய்வது என்று ஆலோசித்து வருகிறோம்.வெளிவிவகார அமைச்சின் தலையீட்டின் ஊடாக அதனை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது என்றார். இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டு இஸ்ரேலிய மத நிலையங்கள் அல்லது கலாச்சார நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.அவ்வாறான இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement