• Jan 05 2025

விகாரைகளில் இருந்து இராணுவத்தினரை நீ்க்கியது தவறு! சாகர காரியவசம் சீற்றம்

Chithra / Dec 31st 2024, 9:06 am
image

 

பௌத்த விகாரைகளில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினரை அங்கிருந்து நீக்கியது தவறான நடவடிக்கையாகும் என பொதுஜன பெரமுண கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் விமர்சித்துள்ளார்.

நேற்று மாலை பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுண கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விகாரைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினரை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளது.

இராணுவத்தினர் விகாரைகளின் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தே இராணுவத்தினர் விகாரைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதற்காக இராணுவத்தினரை ஏன் நீக்க வேண்டும்? எவரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது? என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

விகாரைகளில் இருந்து இராணுவத்தினரை நீ்க்கியது தவறு சாகர காரியவசம் சீற்றம்  பௌத்த விகாரைகளில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினரை அங்கிருந்து நீக்கியது தவறான நடவடிக்கையாகும் என பொதுஜன பெரமுண கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் விமர்சித்துள்ளார்.நேற்று மாலை பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுண கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.விகாரைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினரை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளது.இராணுவத்தினர் விகாரைகளின் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தே இராணுவத்தினர் விகாரைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.அதற்காக இராணுவத்தினரை ஏன் நீக்க வேண்டும் எவரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement