• May 11 2024

வடக்கு கிழக்கில் இதனை இல்லாமல் ஆக்கியவர் தேசிய தலைவர் பிரபாகரனே- சுட்டிக்காட்டும் கஜேந்திரன்...!samugammedia

Sharmi / Apr 15th 2023, 10:02 am
image

Advertisement

இலங்கையிலுள்ள முஸ்லீம் மக்கள், ஒருகாலத்தில் இஸ்லாமிய தமிழர்கள் என்று அழைப்பட்டிருந்தாகவும் ஆனால் இன்று முஸ்லீம் மக்கள், தமிழ் பேசும் தமிழர்கள் என்று அழைத்துக்கொள்ள விரும்பாத அளவிற்கு சிங்கள பௌத்த பேரினவாத அரசு அதனை உருவாக்கியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழில் நேற்று(14) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குவில் ரணில் விக்கிரமசிங்க வழங்கியிருந்த வாக்குமூலமே இதற்கு சிறந்த உதாரணம் என்றும் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இரத்தமும் சதையுமாக வடகிழக்கில் வாழந்து வருகின்ற கிறிஸ்தவ மக்களுக்கும் சைவ மக்களுக்கும் இடையில் ஒரு பகைமையை ஏற்படுத்துவதற்காக சதிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

வடக்கில் 50 வருடங்களுக்கு முன்னர் சாதிப்பிரச்சனை தலைவிரித்து ஆடியாதாகவும் ஆனால் விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்ற பின்னர் சாதிவெறி தணிந்திருந்தாகவும் இதனை மீண்டும் உருவாக்குவதற்கான சதிகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிகாட்டுதலில் வடக்கு கிழக்கில் சாதி ஒழிக்கப்பட்டு ஒரு சமத்துவமான சூழல் உருவாக்கப்பட்டிருந்தாக செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் இதனை இல்லாமல் ஆக்கியவர் தேசிய தலைவர் பிரபாகரனே- சுட்டிக்காட்டும் கஜேந்திரன்.samugammedia இலங்கையிலுள்ள முஸ்லீம் மக்கள், ஒருகாலத்தில் இஸ்லாமிய தமிழர்கள் என்று அழைப்பட்டிருந்தாகவும் ஆனால் இன்று முஸ்லீம் மக்கள், தமிழ் பேசும் தமிழர்கள் என்று அழைத்துக்கொள்ள விரும்பாத அளவிற்கு சிங்கள பௌத்த பேரினவாத அரசு அதனை உருவாக்கியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.யாழில் நேற்று(14) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குவில் ரணில் விக்கிரமசிங்க வழங்கியிருந்த வாக்குமூலமே இதற்கு சிறந்த உதாரணம் என்றும் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் இரத்தமும் சதையுமாக வடகிழக்கில் வாழந்து வருகின்ற கிறிஸ்தவ மக்களுக்கும் சைவ மக்களுக்கும் இடையில் ஒரு பகைமையை ஏற்படுத்துவதற்காக சதிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தார்.வடக்கில் 50 வருடங்களுக்கு முன்னர் சாதிப்பிரச்சனை தலைவிரித்து ஆடியாதாகவும் ஆனால் விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்ற பின்னர் சாதிவெறி தணிந்திருந்தாகவும் இதனை மீண்டும் உருவாக்குவதற்கான சதிகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிகாட்டுதலில் வடக்கு கிழக்கில் சாதி ஒழிக்கப்பட்டு ஒரு சமத்துவமான சூழல் உருவாக்கப்பட்டிருந்தாக செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement