• Nov 26 2024

நைஜீரியாவை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது ஆப்பிரிக்காவின் கால்பந்து சாம்பியன் ஐவரி கோஸ்ட்..!!

Tamil nila / Feb 12th 2024, 9:16 pm
image

உலகில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் மிகவும் சுவாரஸ்யமான தொடர்களில் ஒன்றாக கருதப்படும் ஆப்பிரிக்கக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட்டு நைஜீரியாவை தோற்கடித்து கிண்ணத்தை வென்றுள்ளது.

ஆப்பிரிக்காவின் பலமான அணிகளாக கருதப்படும் ஐவரி கோஸ்ட்டு நைஜீரியா மோதிய இறுதிப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஐவரி கோஸ்ட்டில் நடைபெற்றது.

போட்டியின் ஆரம்பம் முதலேயே இரண்டு அணிகளும் கடுமையான தடுப்புகளை மேற்கொண்டன. ஆட்டத்தின் முற்பாதியில் நைஜீரியா கோல் போட்டு முன்னிலை வகித்தது.

ஆனால், பிற்பாதி ஆட்டத்தில் கதையே மாறியது. ஐவரி கோஸ்ட்டின் ஃபிராங்க் கெஸ்ஸி கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார்.

ஆட்டம் முடிய ஒன்பது நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது ஐவரி கோஸ்ட்டின் வெற்றி கோலை செபாஸ்டியன் ஹேலர் போட்டார்.

இதன் மூலம் 2-1 எனும் கோல் கணக்கில் வாகை வெற்றி சூடிய ஐவரி கோஸ்ட், கிண்ணத்தை ஏந்தியது. ஆப்பிரிக்க கிண்ணத்தை ஐவரி கோஸ்ட் வெல்வது இது மூன்றாவது முறையாகும்.

மிகவும் பலமான அணியாக கருதப்படும் நைஜீரியா உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் ஐவரி கோஸ்ட் வீழ்த்தியது இது முதல் முறையாகும்.

நைஜீரியாவை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது ஆப்பிரிக்காவின் கால்பந்து சாம்பியன் ஐவரி கோஸ்ட். உலகில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் மிகவும் சுவாரஸ்யமான தொடர்களில் ஒன்றாக கருதப்படும் ஆப்பிரிக்கக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட்டு நைஜீரியாவை தோற்கடித்து கிண்ணத்தை வென்றுள்ளது.ஆப்பிரிக்காவின் பலமான அணிகளாக கருதப்படும் ஐவரி கோஸ்ட்டு நைஜீரியா மோதிய இறுதிப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஐவரி கோஸ்ட்டில் நடைபெற்றது.போட்டியின் ஆரம்பம் முதலேயே இரண்டு அணிகளும் கடுமையான தடுப்புகளை மேற்கொண்டன. ஆட்டத்தின் முற்பாதியில் நைஜீரியா கோல் போட்டு முன்னிலை வகித்தது.ஆனால், பிற்பாதி ஆட்டத்தில் கதையே மாறியது. ஐவரி கோஸ்ட்டின் ஃபிராங்க் கெஸ்ஸி கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார்.ஆட்டம் முடிய ஒன்பது நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது ஐவரி கோஸ்ட்டின் வெற்றி கோலை செபாஸ்டியன் ஹேலர் போட்டார்.இதன் மூலம் 2-1 எனும் கோல் கணக்கில் வாகை வெற்றி சூடிய ஐவரி கோஸ்ட், கிண்ணத்தை ஏந்தியது. ஆப்பிரிக்க கிண்ணத்தை ஐவரி கோஸ்ட் வெல்வது இது மூன்றாவது முறையாகும்.மிகவும் பலமான அணியாக கருதப்படும் நைஜீரியா உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் ஐவரி கோஸ்ட் வீழ்த்தியது இது முதல் முறையாகும்.

Advertisement

Advertisement

Advertisement