• Nov 25 2024

யாழ் மக்களே அவதானம்- நீங்கள் இப்படியும் ஏமாற்றப்படலாம்...! வெளியான அறிவிப்பு

Sharmi / Jul 27th 2024, 4:09 pm
image

யாழ்ப்பாணத்தில் தற்போது வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதால் வர்த்தகர்களும் பொது மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ் வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இவ்வாறு தொடரும் மோசடிகளில் பலருடைய வங்கிக் கணக்குகளில் இருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டுள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறும் யாழ்ப்பாண வணிகர் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக வணிகர் கழகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ் நகர  வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் தொலைபேசிக்கு அனாவசியமாக அழைப்புக்கள் மூலம் வங்கி இலக்கத்திற்கு பரிசு அனுப்புவதாக கூறி வங்கி இலக்கத்தையும் கைத் தொலைபேசிக்கு வரும் OTP கடவுச்சொல்லை கேட்கிறார்கள். 

6 இலக்கங்கள் கொண்ட OTP கடவுச்சொல்லை  கூறியவுடன் வங்கிக் கணக்கிலுள்ள பணம் மர்மநபர்களால் களவாடப்படுகிறது. 

மக்களை நம்பும் படி கதைத்து இந்த மோசடி செய்யப்படுகிறது. 

குறுகிய காலப்பகுதிக்குள் அதிகளவிலான மோசடிகள் நடைபெற்றுள்ளது என்பது வங்கி முகாமையாளர்களால் எமக்கு அறியத்தரப்படுள்ளது. 

எனவே அனைவரும் மிகவும் அவதானமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என வர்த்தக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

யாழ் மக்களே அவதானம்- நீங்கள் இப்படியும் ஏமாற்றப்படலாம். வெளியான அறிவிப்பு யாழ்ப்பாணத்தில் தற்போது வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதால் வர்த்தகர்களும் பொது மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ் வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு தொடரும் மோசடிகளில் பலருடைய வங்கிக் கணக்குகளில் இருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டுள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறும் யாழ்ப்பாண வணிகர் கழகம் அறிவுறுத்தியுள்ளது.இவ் விடயம் தொடர்பாக வணிகர் கழகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,யாழ் நகர  வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் தொலைபேசிக்கு அனாவசியமாக அழைப்புக்கள் மூலம் வங்கி இலக்கத்திற்கு பரிசு அனுப்புவதாக கூறி வங்கி இலக்கத்தையும் கைத் தொலைபேசிக்கு வரும் OTP கடவுச்சொல்லை கேட்கிறார்கள். 6 இலக்கங்கள் கொண்ட OTP கடவுச்சொல்லை  கூறியவுடன் வங்கிக் கணக்கிலுள்ள பணம் மர்மநபர்களால் களவாடப்படுகிறது. மக்களை நம்பும் படி கதைத்து இந்த மோசடி செய்யப்படுகிறது. குறுகிய காலப்பகுதிக்குள் அதிகளவிலான மோசடிகள் நடைபெற்றுள்ளது என்பது வங்கி முகாமையாளர்களால் எமக்கு அறியத்தரப்படுள்ளது. எனவே அனைவரும் மிகவும் அவதானமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என வர்த்தக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement