• Apr 01 2025

யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை - இன்று முதல் ஆரம்பம்

Thansita / Mar 30th 2025, 7:49 pm
image

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள்  47 ஆண்டுகளுக்குப் பின்னர்  இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. 

திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்நிலையில் விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட துணைத்தூதராக அதிகாரிகள் இவிமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

குறித்த விமான சேவையானது தினமும் 1.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு  2.25 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும்.என அறிவிக்கப்பட்டுள்ளது

 யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, திருச்சியை மாலை 4 மணியளவில் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க விரும்புவோர், திருச்சி சென்று, திருச்சி ஊடாக சிங்கப்பூர்  பயணிக்கக்கூடிய விதத்தில் விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை - இன்று முதல் ஆரம்பம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள்  47 ஆண்டுகளுக்குப் பின்னர்  இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்நிலையில் விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட துணைத்தூதராக அதிகாரிகள் இவிமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த விமான சேவையானது தினமும் 1.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு  2.25 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும்.என அறிவிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, திருச்சியை மாலை 4 மணியளவில் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க விரும்புவோர், திருச்சி சென்று, திருச்சி ஊடாக சிங்கப்பூர்  பயணிக்கக்கூடிய விதத்தில் விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement