யாழ்ப்பாணம் - பல்லசுட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பெற்ற 8 அடி உயரம் கொண்ட சரஸ்வதி சிலையானது இன்றையதினம்(09) திறந்து வைக்கப்பட்டது.
கதிரமலை யோகேஸ்வரன் என்பவரின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில், பல்லசுட்டி காந்தி ஜீ முன்பள்ளி வளாகத்தில் குறித்த சிலை அமைக்கப்பெற்று, நவராத்திரி விரதத்தின் சரஸ்வதிக்கான விரதத்தின் ஆரம்ப நாளான இன்றையதினம்(09) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது விசேட அபிஷேகம் மற்றும் பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்றன.
இந்த சிலையானது கட்டுடை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் பத்மநாதன் என்ற சிற்ப ஆசாரியாரின் கை வண்ணத்தில் அமைக்கப்பட்டது.
திறப்பு விழாவின் பின்னர் விசேட அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.
யாழ். பல்லசுட்டியில் 8 அடி உயர சரஸ்வதி சிலை திறப்பு. யாழ்ப்பாணம் - பல்லசுட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பெற்ற 8 அடி உயரம் கொண்ட சரஸ்வதி சிலையானது இன்றையதினம்(09) திறந்து வைக்கப்பட்டது.கதிரமலை யோகேஸ்வரன் என்பவரின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில், பல்லசுட்டி காந்தி ஜீ முன்பள்ளி வளாகத்தில் குறித்த சிலை அமைக்கப்பெற்று, நவராத்திரி விரதத்தின் சரஸ்வதிக்கான விரதத்தின் ஆரம்ப நாளான இன்றையதினம்(09) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதன்போது விசேட அபிஷேகம் மற்றும் பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்றன.இந்த சிலையானது கட்டுடை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் பத்மநாதன் என்ற சிற்ப ஆசாரியாரின் கை வண்ணத்தில் அமைக்கப்பட்டது.திறப்பு விழாவின் பின்னர் விசேட அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.