• Feb 24 2025

யாழ் மாவட்ட பதில் செயலாளரின் சொகுசு வாகனம் விபத்து..!

Sharmi / Feb 23rd 2025, 10:32 pm
image

யாழ் மாவட்ட பதில் செயலாளரின் தனிப்பட்ட சொகுசு வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் இன்றையதினம்(22)  இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் மாவட்ட பதில் செயலாளரின் தனிப்பட்ட சொகுசு வாகனம் யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடம் சந்திக்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்து இடம்பெற்ற வேளை மாவட்ட பதில் செயலாளரின் மகனே குறித்த வாகனத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் படுகாயம் அடைந்த, மாவட்ட பதில் செயலாளரின் மகனும் அவரது நண்பரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 









யாழ் மாவட்ட பதில் செயலாளரின் சொகுசு வாகனம் விபத்து. யாழ் மாவட்ட பதில் செயலாளரின் தனிப்பட்ட சொகுசு வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் இன்றையதினம்(22)  இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் மாவட்ட பதில் செயலாளரின் தனிப்பட்ட சொகுசு வாகனம் யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடம் சந்திக்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து இடம்பெற்ற வேளை மாவட்ட பதில் செயலாளரின் மகனே குறித்த வாகனத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்தில் படுகாயம் அடைந்த, மாவட்ட பதில் செயலாளரின் மகனும் அவரது நண்பரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement