• Dec 18 2024

யாழ். மாவட்ட காணி உரித்துப் பதிவு தொடர்பான செயலமர்வு : அரச அதிபர் பிரதீபனின் தலைமையில் நடைபெற்றது

Tharmini / Dec 18th 2024, 9:45 am
image

காணி உரித்துப் பதிவு தொடர்பான செயலமர்வு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் நேற்று (17)  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரச அதிபர்,"பொது மக்களுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான சேவை வழங்கும் உத்தியோகத்தர்களாக பதிவாளர் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளனர்.

இவர்கள் திருமணம், பிறப்பு, இறப்பு மற்றும் காணிப் பதிவுகள் தொடர்பான  சேவையை வழங்கும் நோக்குடன் செயற்படும் பிரதானமான உத்தியோகத்தர்களாகவும், பொதுமக்களின் அன்றாட கருமங்களுடன் தொடர்புபட்டுள்ள பொது நலன் சார்ந்தவர்களாக மக்களுக்குச் சேவையாற்றும் உன்னதமான பொறுப்புள்ள உத்தியோகத்தர்களாகவும்  விளங்குகின்றனர்.

பதிவாளர் நாயகம் பதிவியேற்று  ஒரு வருடத்துக்குள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

 பதிவாளர் நாயகத்துடன் மாவட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே கலந்துரையாடியுள்ளோம்.

இந்தச் செயலமர்வானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் நடைபெறுவது சிறப்பான விடயமாகும். இது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையை மென்மேலும் வினைத்திறனாக வழங்குவதற்கு உந்துதலாக அமைந்துள்ளது. அதற்காகப் பதிவாளர் நாயகத்துக்கு நன்றி தெரிவிக்கின்றோம்." - என்றார்.





யாழ். மாவட்ட காணி உரித்துப் பதிவு தொடர்பான செயலமர்வு : அரச அதிபர் பிரதீபனின் தலைமையில் நடைபெற்றது காணி உரித்துப் பதிவு தொடர்பான செயலமர்வு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் நேற்று (17)  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரச அதிபர்,"பொது மக்களுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான சேவை வழங்கும் உத்தியோகத்தர்களாக பதிவாளர் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளனர்.இவர்கள் திருமணம், பிறப்பு, இறப்பு மற்றும் காணிப் பதிவுகள் தொடர்பான  சேவையை வழங்கும் நோக்குடன் செயற்படும் பிரதானமான உத்தியோகத்தர்களாகவும், பொதுமக்களின் அன்றாட கருமங்களுடன் தொடர்புபட்டுள்ள பொது நலன் சார்ந்தவர்களாக மக்களுக்குச் சேவையாற்றும் உன்னதமான பொறுப்புள்ள உத்தியோகத்தர்களாகவும்  விளங்குகின்றனர்.பதிவாளர் நாயகம் பதிவியேற்று  ஒரு வருடத்துக்குள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும். பதிவாளர் நாயகத்துடன் மாவட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே கலந்துரையாடியுள்ளோம்.இந்தச் செயலமர்வானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் நடைபெறுவது சிறப்பான விடயமாகும். இது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையை மென்மேலும் வினைத்திறனாக வழங்குவதற்கு உந்துதலாக அமைந்துள்ளது. அதற்காகப் பதிவாளர் நாயகத்துக்கு நன்றி தெரிவிக்கின்றோம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement