• Mar 07 2026

தேசிய கலை இலக்கியப் பெருவிழாவில் யாழ். மாவட்டத்துக்கு 14 விருதுகள்!

Chithra / Jan 26th 2026, 10:57 am
image

கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய தேசிய மட்ட கலை இலக்கியப் போட்டிகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 14 விருதுகள் கிடைத்துள்ளன.


கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டு தோறும் நடத்தும் கலை இலக்கியப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் சாதித்தவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.


இந்த விருது வழங்கும் விழாவில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 14 விருதுகள் கிடைத்துள்ளன. அந்தவகையில் சண்டிலிப்பாய் பிரதேசத்துக்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றது.


இந்த விருது வழங்கல் விழாவில், சண்டிலிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த சாதனையாளர்கள் ஐந்து தேசிய விருதுகளைத் தம்வசப்படுத்தியுள்ளனர்.


திறந்த பிரிவு கவிதையாக்கத்தில் தம்பித்துரை குணத்திலகம் முதலாமிடத்தையும், நாட்டார் கலைகற்றல் ஆய்வில் செல்வம் அபிராமி இரண்டாமிடத்தையும், பாடலாக்கத்தில் தம்பித்துரை குணத்திலகம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.


அத்துடன் பாடல் நயத்தல் போட்டியில் த. அக்டோபர் ஷரா முதலாமிடத்தையும் மற்றும் சிறுவர் பிரிவு கையெழுத்துப் போட்டியில் எஸ். வயோமிகா இரண்டாமிடத்தையும் பெற்று பெருமை தேடித்தந்துள்ளனர்.


இந்த நிலையில், வெற்றியாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழுடன் பணப்பரிசாக முறையே, முதலாமிடம் பெற்றோருக்கு 15,000 ரூபாவும், இரண்டாமிடத்துக்கு 12,500 ரூபாவும் மற்றும் மூன்றாமிடத்துக்கு 10,000 ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டு தோறும் நடத்தும் இப்போட்டிகளில், பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் முதலாமிடங்களைப் பெற்றுத் தேசிய மட்டத்தில் இச்சாதனையாளர்கள் தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தேசிய கலை இலக்கியப் பெருவிழாவில் யாழ். மாவட்டத்துக்கு 14 விருதுகள் கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய தேசிய மட்ட கலை இலக்கியப் போட்டிகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 14 விருதுகள் கிடைத்துள்ளன.கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டு தோறும் நடத்தும் கலை இலக்கியப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் சாதித்தவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.இந்த விருது வழங்கும் விழாவில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 14 விருதுகள் கிடைத்துள்ளன. அந்தவகையில் சண்டிலிப்பாய் பிரதேசத்துக்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றது.இந்த விருது வழங்கல் விழாவில், சண்டிலிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த சாதனையாளர்கள் ஐந்து தேசிய விருதுகளைத் தம்வசப்படுத்தியுள்ளனர்.திறந்த பிரிவு கவிதையாக்கத்தில் தம்பித்துரை குணத்திலகம் முதலாமிடத்தையும், நாட்டார் கலைகற்றல் ஆய்வில் செல்வம் அபிராமி இரண்டாமிடத்தையும், பாடலாக்கத்தில் தம்பித்துரை குணத்திலகம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.அத்துடன் பாடல் நயத்தல் போட்டியில் த. அக்டோபர் ஷரா முதலாமிடத்தையும் மற்றும் சிறுவர் பிரிவு கையெழுத்துப் போட்டியில் எஸ். வயோமிகா இரண்டாமிடத்தையும் பெற்று பெருமை தேடித்தந்துள்ளனர்.இந்த நிலையில், வெற்றியாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழுடன் பணப்பரிசாக முறையே, முதலாமிடம் பெற்றோருக்கு 15,000 ரூபாவும், இரண்டாமிடத்துக்கு 12,500 ரூபாவும் மற்றும் மூன்றாமிடத்துக்கு 10,000 ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டு தோறும் நடத்தும் இப்போட்டிகளில், பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் முதலாமிடங்களைப் பெற்றுத் தேசிய மட்டத்தில் இச்சாதனையாளர்கள் தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement