• Sep 08 2024

வட மாகாண வேக நடை போட்டியில் யாழ் மாவட்ட பெண்கள் அணி சாதனை...!

Sharmi / Mar 2nd 2024, 4:34 pm
image

Advertisement

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில்  வட மாகாண ரீதியாக நடைபெற்ற வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி மாவட்டம் முதல் இடத்தையும், பெண்கள் பிரிவில் யாழ் மாவட்டம் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.

ஐந்து மாவட்டங்களிலும் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஆண்,பெண் சேர்ந்து 31 பேர் கலந்து கொண்ட 20 கிலோ மீட்டர் தூர வேக நடை போட்டியில்,  ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலக பிரிவை சேர்ந்த கண்ணன் கலையரசன் சுமார் 2.15.08 நேரத்தில் நடந்து முடித்துள்ளார்.

இதேபோன்று, பெண்கள் பிரிவில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார் கெளசிகா சுமார் 2.18.59 நேரத்தில் நடந்து முடித்துள்ளார்கள்.

2013, 2014 ஆண்டுகளில் வட மாகாண ரீதியான வேகநடை போட்டியில் ஆண்கள் பிரிவில் ஒரு மணித்தியாலத்தில் ஐம்பத்து இரண்டு நிமிடத்திலும் பெண்கள் பிரிவில் இரண்டு மணித்தியாலயத்தில் 11 நிமிடத்தில் நடந்து முடிக்கப்பட்ட வேகத்தை 2024 ஆண்டு வேக நடை போட்டியாளர்களால் முறியடிக்க முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


வட மாகாண வேக நடை போட்டியில் யாழ் மாவட்ட பெண்கள் அணி சாதனை. வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில்  வட மாகாண ரீதியாக நடைபெற்ற வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி மாவட்டம் முதல் இடத்தையும், பெண்கள் பிரிவில் யாழ் மாவட்டம் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.ஐந்து மாவட்டங்களிலும் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஆண்,பெண் சேர்ந்து 31 பேர் கலந்து கொண்ட 20 கிலோ மீட்டர் தூர வேக நடை போட்டியில்,  ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலக பிரிவை சேர்ந்த கண்ணன் கலையரசன் சுமார் 2.15.08 நேரத்தில் நடந்து முடித்துள்ளார்.இதேபோன்று, பெண்கள் பிரிவில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார் கெளசிகா சுமார் 2.18.59 நேரத்தில் நடந்து முடித்துள்ளார்கள்.2013, 2014 ஆண்டுகளில் வட மாகாண ரீதியான வேகநடை போட்டியில் ஆண்கள் பிரிவில் ஒரு மணித்தியாலத்தில் ஐம்பத்து இரண்டு நிமிடத்திலும் பெண்கள் பிரிவில் இரண்டு மணித்தியாலயத்தில் 11 நிமிடத்தில் நடந்து முடிக்கப்பட்ட வேகத்தை 2024 ஆண்டு வேக நடை போட்டியாளர்களால் முறியடிக்க முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement