• Oct 01 2024

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த யாழ். மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு!

Chithra / Aug 10th 2023, 4:47 pm
image

Advertisement

தமிழ்த்தின போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த யாழ் முத்துத்தம்பி மகாவித்தியாலய மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற தமிழ் தின இலக்கணப் போட்டியில் தேசிய மட்டத்தில் யாழ் முத்துத்தம்பி மகா வித்தியாலயம் மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தார்.

தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் இ.சுபதீஸ்வரன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண  கல்விப் பணிப்பாளர் யோன் குயின்ரஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிக்கு பொன்னாடை போர்த்தி தங்கப் பதக்கங்கள் கேடயங்கள் வழங்கி கௌரவித்தனர்.

இந் நிகழ்வில் விசேட அம்சமாக சாதனை படைத்த மாணவியுடன் மாணவிக்கு கற்பித்த ஆசிரியரும் குறிப்பாக மாணவியின் தாயாரும் விருந்தினர்களுடன் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் அளித்த எடுத்து வரவேற்புடன் அழைத்து வர்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள்  மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


தேசிய மட்டத்தில் சாதனை படைத்த யாழ். மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு தமிழ்த்தின போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த யாழ் முத்துத்தம்பி மகாவித்தியாலய மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற தமிழ் தின இலக்கணப் போட்டியில் தேசிய மட்டத்தில் யாழ் முத்துத்தம்பி மகா வித்தியாலயம் மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தார்.தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் இ.சுபதீஸ்வரன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண  கல்விப் பணிப்பாளர் யோன் குயின்ரஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிக்கு பொன்னாடை போர்த்தி தங்கப் பதக்கங்கள் கேடயங்கள் வழங்கி கௌரவித்தனர்.இந் நிகழ்வில் விசேட அம்சமாக சாதனை படைத்த மாணவியுடன் மாணவிக்கு கற்பித்த ஆசிரியரும் குறிப்பாக மாணவியின் தாயாரும் விருந்தினர்களுடன் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் அளித்த எடுத்து வரவேற்புடன் அழைத்து வர்பட்டமை குறிப்பிடத்தக்கது.மேலும் நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள்  மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement