• May 19 2024

சர்வதேச போட்டிகளில் சாதித்த யாழ். இளைஞன் புசாந்தனை சந்தித்த ஜனாதிபதி!

Chithra / Jan 7th 2024, 7:05 pm
image

Advertisement

  

சர்வதேச போட்டிகளில் சாதித்த யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த பளுத்தூக்கல் வீரன் புசாந்தனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து வாழ்த்தினார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஐஸ்கிரீம் விற்பனை நிலையமொன்றிற்கு விஜயம் செய்து meet-and-greet என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் புசாந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.

வடமாகாணத்தில் கல்வி, விளையாட்டு, நாடகம் மற்றும் திரைப்படக் கலை, சமூக ஊடகங்கள் போன்ற துறைகளில் திறமை செலுத்தியோர் கலந்துகொண்டதோடு,

அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதன்போது அண்மையில் மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2023(Asian Classic Powerlifting Championship 2023) போட்டியில் இலங்கை தேசிய பளுத்தூக்கல் அணிசார்பாக பங்குபற்றி இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்ற புசாந்தனையும் வாழ்த்தினார்.

புசாந்தன் தேசிய சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


சர்வதேச போட்டிகளில் சாதித்த யாழ். இளைஞன் புசாந்தனை சந்தித்த ஜனாதிபதி   சர்வதேச போட்டிகளில் சாதித்த யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த பளுத்தூக்கல் வீரன் புசாந்தனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து வாழ்த்தினார்.யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஐஸ்கிரீம் விற்பனை நிலையமொன்றிற்கு விஜயம் செய்து meet-and-greet என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் புசாந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.வடமாகாணத்தில் கல்வி, விளையாட்டு, நாடகம் மற்றும் திரைப்படக் கலை, சமூக ஊடகங்கள் போன்ற துறைகளில் திறமை செலுத்தியோர் கலந்துகொண்டதோடு,அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.இதன்போது அண்மையில் மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2023(Asian Classic Powerlifting Championship 2023) போட்டியில் இலங்கை தேசிய பளுத்தூக்கல் அணிசார்பாக பங்குபற்றி இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்ற புசாந்தனையும் வாழ்த்தினார்.புசாந்தன் தேசிய சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement