• Apr 01 2025

யாழ். சிறையில் இருந்த கணவன், உணவு கொண்டு சென்ற மனைவி - விபத்தில் பலி

Thansita / Mar 30th 2025, 10:03 pm
image

யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்று மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது

 கைதடி - தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண், கடந்த 13ஆம் திகதி சிறையில் உள்ள தனது கணவனுக்கு உணவு கொடுப்பதற்காக கைதடி வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தார். 

இந்நிலையில் அதே வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.


யாழ். சிறையில் இருந்த கணவன், உணவு கொண்டு சென்ற மனைவி - விபத்தில் பலி யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்று மரணமடைந்துள்ளார்.குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது கைதடி - தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண், கடந்த 13ஆம் திகதி சிறையில் உள்ள தனது கணவனுக்கு உணவு கொடுப்பதற்காக கைதடி வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் அதே வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றது.இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement