மக்கள் வரி பணத்தில் இடம்பெறும் அபிவிருத்தி குழு கூட்டங்களை மக்கள் அறிய வேண்டும். இந்நிலையில் ஊடகங்களை அடக்க நினைப்பது மோசமான செயல் என வலி கிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை யாழ். மவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகங்கள் தொடர்பாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் மக்கள் வரிப்பணத்தில் இடம்பெறுகிறது. அதில் இடம்பெறுகின்ற விடயங்களை மக்கள் அறிவதற்காக ஊடகங்களின் உதவி தேவை.
மக்கள் தாம் வாக்களித்த பிரதிநிதிகள் தமக்காக என்ன கதைக்கிறார்கள் என்பது தொடர்பில் அறிவது அவர்களின் உரிமை. அதை ஊடகங்கள் அவர்களுக்கு சரியான முறையில் வழங்க வேண்டும்.
அதை விடுத்து ஊடகங்களை காணொளி எடுப்பதற்கு கட்டுப்படுத்தம் செயற்பாடு மோசமான ஒரு அடக்கு முறையின் செயற்பாடு என அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடக அடக்குமுறை வலி.கிழக்கு தவிசாளர் கொந்தளிப்பு மக்கள் வரி பணத்தில் இடம்பெறும் அபிவிருத்தி குழு கூட்டங்களை மக்கள் அறிய வேண்டும். இந்நிலையில் ஊடகங்களை அடக்க நினைப்பது மோசமான செயல் என வலி கிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.இன்று வெள்ளிக்கிழமை யாழ். மவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகங்கள் தொடர்பாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் மக்கள் வரிப்பணத்தில் இடம்பெறுகிறது. அதில் இடம்பெறுகின்ற விடயங்களை மக்கள் அறிவதற்காக ஊடகங்களின் உதவி தேவை. மக்கள் தாம் வாக்களித்த பிரதிநிதிகள் தமக்காக என்ன கதைக்கிறார்கள் என்பது தொடர்பில் அறிவது அவர்களின் உரிமை. அதை ஊடகங்கள் அவர்களுக்கு சரியான முறையில் வழங்க வேண்டும். அதை விடுத்து ஊடகங்களை காணொளி எடுப்பதற்கு கட்டுப்படுத்தம் செயற்பாடு மோசமான ஒரு அடக்கு முறையின் செயற்பாடு என அவர் மேலும் தெரிவித்தார்.