• Mar 28 2026

மோடி – அநுரவுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் பலன்: எரிபொருளுடன் நாளை வரும் கப்பல்!

Chithra / Mar 27th 2026, 5:56 pm
image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக, நாளை (28) நாட்டிற்கு எரிபொருள் கப்பல் ஒன்று கிடைக்கவுள்ளது. 

20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய இந்தக் கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. 

இலங்கையின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மற்றுமொரு கட்டமாக இந்த எரிபொருள் கையிருப்பு அமைந்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு உறுதுணையாக அமைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

மோடி – அநுரவுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் பலன்: எரிபொருளுடன் நாளை வரும் கப்பல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக, நாளை (28) நாட்டிற்கு எரிபொருள் கப்பல் ஒன்று கிடைக்கவுள்ளது. 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய இந்தக் கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இலங்கையின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மற்றுமொரு கட்டமாக இந்த எரிபொருள் கையிருப்பு அமைந்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு உறுதுணையாக அமைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement