• Mar 12 2025

தமிழரசின் யாழ். மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா - பெருமளவு ஆதரவாளர்கள் பங்கேற்பு!

Tamil nila / Oct 13th 2024, 7:01 pm
image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடைபெற்றது.


தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது யாழ். தேர்தல் மாவட்ட 9 வேட்பாளர்களும் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


தமிழரசின் யாழ். மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா - பெருமளவு ஆதரவாளர்கள் பங்கேற்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடைபெற்றது.தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.இதன்போது யாழ். தேர்தல் மாவட்ட 9 வேட்பாளர்களும் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement