• Nov 28 2024

யாழ். மாவட்ட கூட்டுறவு சபையின் 'ஐக்கிய தீபம்' பத்திரிகை வெளியீடு !

Tharmini / Oct 27th 2024, 9:42 am
image

யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபையினால்  ஐக்கிய தீபம் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வானது நேற்று (26) சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.

2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டெம்பர் மாதத்துக்கான இதழே இவ்வாறு வெளியிட்டு வைக்கப்பட்டது.

சங்கானனை பல.நோ.கூ சங்கத்தின் தலைவர் ப.கேசவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில் மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் திரு.மகாதேவன், சங்கத்தின் பொது முகாமையாளர்  கிருஷ்ணவேணி, சங்கத்தின் ஊழியர்கள், காரைநகர் ப.நோ.கூ.ச பொது முகாமையாளர், மானிப்பாய் சங்கானை பல.நோ.கூ.ச பணியாளர்கள், சிக்கன கடன் வழங்கும் கூட்டுறவு சங்கங்களின் வெளிக்கள உத்தியோகத்தர் கௌரிதேவி, ப.நோ.கூ.ச பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கம், தோற்பொருள் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தினர், வடபிரதேச நல்லொழுக்க சம்மதனத்தின் பிரதிநிதிகள், ஐக்கிய நாணய சங்க பிரதிநிதிகள், சங்கத்தின் அங்கத்தவர்கள், பொதுச்சபை பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

கூட்டுறவு அமைப்பின் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் இந்த பத்திரிகை வெளியிடப்பட்டு வருகின்றது.

கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள், பணிப்பாளர்கள், சங்கங்களின் அங்கத்தவர்கள் ஆகியோர் தங்களது ஆக்கங்களை மாவட்ட கூட்டுறவு சபைக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தங்களது ஆக்கங்களும் பத்திரிகையில் பிரசுரமாகும். மாவட்ட கூட்டுறவு சபை, வீரசிங்கம் கட்டட தொகுதி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு ஆக்கங்களை அனுப்பி வைக்கலாம்.





யாழ். மாவட்ட கூட்டுறவு சபையின் 'ஐக்கிய தீபம்' பத்திரிகை வெளியீடு யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபையினால்  ஐக்கிய தீபம் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வானது நேற்று (26) சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டெம்பர் மாதத்துக்கான இதழே இவ்வாறு வெளியிட்டு வைக்கப்பட்டது.சங்கானனை பல.நோ.கூ சங்கத்தின் தலைவர் ப.கேசவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில் மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் திரு.மகாதேவன், சங்கத்தின் பொது முகாமையாளர்  கிருஷ்ணவேணி, சங்கத்தின் ஊழியர்கள், காரைநகர் ப.நோ.கூ.ச பொது முகாமையாளர், மானிப்பாய் சங்கானை பல.நோ.கூ.ச பணியாளர்கள், சிக்கன கடன் வழங்கும் கூட்டுறவு சங்கங்களின் வெளிக்கள உத்தியோகத்தர் கௌரிதேவி, ப.நோ.கூ.ச பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கம், தோற்பொருள் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தினர், வடபிரதேச நல்லொழுக்க சம்மதனத்தின் பிரதிநிதிகள், ஐக்கிய நாணய சங்க பிரதிநிதிகள், சங்கத்தின் அங்கத்தவர்கள், பொதுச்சபை பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.கூட்டுறவு அமைப்பின் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் இந்த பத்திரிகை வெளியிடப்பட்டு வருகின்றது.கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள், பணிப்பாளர்கள், சங்கங்களின் அங்கத்தவர்கள் ஆகியோர் தங்களது ஆக்கங்களை மாவட்ட கூட்டுறவு சபைக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தங்களது ஆக்கங்களும் பத்திரிகையில் பிரசுரமாகும். மாவட்ட கூட்டுறவு சபை, வீரசிங்கம் கட்டட தொகுதி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு ஆக்கங்களை அனுப்பி வைக்கலாம்.

Advertisement

Advertisement

Advertisement