• Jan 26 2025

ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட யாழ். இளைஞனுக்கு நேர்ந்த கதி!

Chithra / Jan 12th 2025, 6:45 am
image


போலி ஜேர்மனி விசாவை பயன்படுத்தி ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை நிர்ணய கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர், புதுடில்லி சென்று பின்னர் அங்கிருந்து, மற்றுமொரு விமானத்தில் ஜேர்மனி நோக்கி பயணிக்க முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் ஜேர்மனி நாட்டுக்கான விசா போலியானது என தெரியவந்துள்ளது.


ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட யாழ். இளைஞனுக்கு நேர்ந்த கதி போலி ஜேர்மனி விசாவை பயன்படுத்தி ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை நிர்ணய கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர், புதுடில்லி சென்று பின்னர் அங்கிருந்து, மற்றுமொரு விமானத்தில் ஜேர்மனி நோக்கி பயணிக்க முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் ஜேர்மனி நாட்டுக்கான விசா போலியானது என தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement