• Nov 28 2024

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் வெள்ளி விழா எதிர்வரும் சனியன்று ஆரம்பம்

Tharmini / Oct 23rd 2024, 10:57 am
image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு நாள் நிகழ்வுகள் எதிர்வரும், 26ஆம் திகதி, சனிக்கிழமை பிற்பகல் முகாமைத்துவக்கற்கைகள் வணிகபீட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளன.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது 50ஆவது வருட நிறைவில் பொன் விழாக்காணும் சமகாலத்தில், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடம் தனது வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது.

1974ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது, கலைப் பீடத்துடன் இணைந்து செயற்பட்டுவந்த வணிகத்துறை,  1999ஆம் ஆண்டு ஐந்தாவது தனிப்பீடமாக இயங்கத் தொடங்கியது. இப்பீடம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இலங்கையில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் வணிக முகாமைத்துவக் கல்விக்கு பெரும்பங்களிப்பை வழங்கி வருகிறது.  

பீடத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறிய மாணவர்கள் இலங்கையில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியிலும் பல்வேறு பெரும் பதவிகளை வகித்துவருகின்றனர்.இப் பீடமானது பல்வேறு பெரும் பதவிகளை வகிக்கும் மாணவர்களை உருவாக்கிய அதேவேளை சமூகத்திற்கு பல்வேறு பங்களிப்புகளையும் நல்கி வந்துள்ளது.  

முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடம் காலத்தின் தேவைகருதி 1999 இலிருந்து வியாபார நிர்வாகமாணியில்  கணக்கியல், நிதிமுகாமைத்துவம், மனிதவளம், சந்தைப்படுத்தல் துறைகளில் சிறப்பு பட்டத்தை வழங்கிவரும் அதேவேளை கடந்த ஆண்டிலிருந்து சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் சிறப்புப் பட்டத்துக்கான கற்கைநெறியையும் ஆரம்பித்துள்ளதுடன், வணிகமாணியில் கணிக்கியலும் நிதியும் மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்பவற்றில் சிறப்புப் பட்டத்தினையும் வழங்கி வருகின்றது.  உள்வாரி மாணவர்களுக்கான இத்தகைய சிறப்புப்பட்டங்கள் மாத்திரமன்றி ஆயிரக்கணக்கான வெளிவாரி மாணவர்களுக்கு வணிகமாணி மற்றும் வியாபார முகாமைத்துவமாணி பட்டங்களையும் வழங்கிய பெருமை இந்த பீடத்தையே சாரும்.

 உள்வாரியாகப் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதோர் தொழில் புரிந்து கொண்டே தமது கல்வியை வெளிவாரியாகத் தொடரக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்குகின்றமை ஒரு வரப்பிரசாதமாகும். 

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் வெள்ளி விழா எதிர்வரும் சனியன்று ஆரம்பம் யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு நாள் நிகழ்வுகள் எதிர்வரும், 26ஆம் திகதி, சனிக்கிழமை பிற்பகல் முகாமைத்துவக்கற்கைகள் வணிகபீட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளன.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது 50ஆவது வருட நிறைவில் பொன் விழாக்காணும் சமகாலத்தில், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடம் தனது வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது.1974ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது, கலைப் பீடத்துடன் இணைந்து செயற்பட்டுவந்த வணிகத்துறை,  1999ஆம் ஆண்டு ஐந்தாவது தனிப்பீடமாக இயங்கத் தொடங்கியது. இப்பீடம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இலங்கையில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் வணிக முகாமைத்துவக் கல்விக்கு பெரும்பங்களிப்பை வழங்கி வருகிறது.  பீடத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறிய மாணவர்கள் இலங்கையில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியிலும் பல்வேறு பெரும் பதவிகளை வகித்துவருகின்றனர்.இப் பீடமானது பல்வேறு பெரும் பதவிகளை வகிக்கும் மாணவர்களை உருவாக்கிய அதேவேளை சமூகத்திற்கு பல்வேறு பங்களிப்புகளையும் நல்கி வந்துள்ளது.  முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடம் காலத்தின் தேவைகருதி 1999 இலிருந்து வியாபார நிர்வாகமாணியில்  கணக்கியல், நிதிமுகாமைத்துவம், மனிதவளம், சந்தைப்படுத்தல் துறைகளில் சிறப்பு பட்டத்தை வழங்கிவரும் அதேவேளை கடந்த ஆண்டிலிருந்து சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் சிறப்புப் பட்டத்துக்கான கற்கைநெறியையும் ஆரம்பித்துள்ளதுடன், வணிகமாணியில் கணிக்கியலும் நிதியும் மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்பவற்றில் சிறப்புப் பட்டத்தினையும் வழங்கி வருகின்றது.  உள்வாரி மாணவர்களுக்கான இத்தகைய சிறப்புப்பட்டங்கள் மாத்திரமன்றி ஆயிரக்கணக்கான வெளிவாரி மாணவர்களுக்கு வணிகமாணி மற்றும் வியாபார முகாமைத்துவமாணி பட்டங்களையும் வழங்கிய பெருமை இந்த பீடத்தையே சாரும். உள்வாரியாகப் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதோர் தொழில் புரிந்து கொண்டே தமது கல்வியை வெளிவாரியாகத் தொடரக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்குகின்றமை ஒரு வரப்பிரசாதமாகும். 

Advertisement

Advertisement

Advertisement