• Sep 21 2024

யாழ் இளைஞனிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி- பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! samugammedia

Tamil nila / Aug 11th 2023, 10:21 pm
image

Advertisement

யாழ்ப்பாண இளைஞர் ஒருவரை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக  யாழ்ப்பாணம் வலிகாமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 25 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, இத்தாலியில் வசிக்கும் வெளிநாட்டுக்கு எடுப்பதாக கூறியநிலையில்,  யாழ்ப்பாணம் வலிகாமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தரகர் மூலம் குறித்த இளைஞனை அணுகியுள்ளார்.

இளைஞனுடன் சகல விபரங்களையும் பெற்றுக்கொண்ட தரகர் போலி விசாவினை இத்தாலியில் வசிக்கும் நபர் மூலம் பெற்றுக்கொண்டு இளைஞனுக்கு வழங்கியுள்ளனர்.

வீசாவினை தூதரகத்திடம் காண்பித்த போது குறித்த வேலை வாய்ப்புக்கான வீசா போலியானது என உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞன், இத்தாலியில் வாசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரே பிரதான சூத்திரதாரி.

இவர் முல்லைத்தீவு தீவு பெண் ஒருவரை முதலில் திருமணம் செய்து இரு பிள்ளைகள் இருப்பதாகவும் பின்னர் அவர்களை கைவிட்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை மறுமணம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த நபர் என்னைப் போன்ற பலரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய்களை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.


யாழ் இளைஞனிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி- பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு samugammedia யாழ்ப்பாண இளைஞர் ஒருவரை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக  யாழ்ப்பாணம் வலிகாமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 25 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, இத்தாலியில் வசிக்கும் வெளிநாட்டுக்கு எடுப்பதாக கூறியநிலையில்,  யாழ்ப்பாணம் வலிகாமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தரகர் மூலம் குறித்த இளைஞனை அணுகியுள்ளார்.இளைஞனுடன் சகல விபரங்களையும் பெற்றுக்கொண்ட தரகர் போலி விசாவினை இத்தாலியில் வசிக்கும் நபர் மூலம் பெற்றுக்கொண்டு இளைஞனுக்கு வழங்கியுள்ளனர்.வீசாவினை தூதரகத்திடம் காண்பித்த போது குறித்த வேலை வாய்ப்புக்கான வீசா போலியானது என உறுதிப்படுத்தப்பட்டது.இந்த தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞன், இத்தாலியில் வாசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரே பிரதான சூத்திரதாரி.இவர் முல்லைத்தீவு தீவு பெண் ஒருவரை முதலில் திருமணம் செய்து இரு பிள்ளைகள் இருப்பதாகவும் பின்னர் அவர்களை கைவிட்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை மறுமணம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.குறித்த நபர் என்னைப் போன்ற பலரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய்களை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement