கனடாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இளைஞனிடமிருந்து 60 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ள போதும் இதுவரையில் பயண ஏற்பாடுகள் எதனையும் அவர் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞன் இது குறித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தமையை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த பெண்ணை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த பெண் தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள இளைஞனிடம் கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக 4 இலட்ச ரூபாய் பணத்தினை அவரிடம் கையளித்துள்ளமையை அடுத்து,
அவரை 06 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கனடா செல்ல ஆசைப்பட்ட யாழ்ப்பாண இளைஞனுக்கு நேர்ந்த கதி. பெண் செய்த மோசமான செயல். கனடாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இளைஞனிடமிருந்து 60 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ள போதும் இதுவரையில் பயண ஏற்பாடுகள் எதனையும் அவர் மேற்கொள்ளவில்லை.இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞன் இது குறித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தமையை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த பெண்ணை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.இதன்போது குறித்த பெண் தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள இளைஞனிடம் கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக 4 இலட்ச ரூபாய் பணத்தினை அவரிடம் கையளித்துள்ளமையை அடுத்து,அவரை 06 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.