• May 17 2024

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை உறுப்பினர்களை சந்தித்த ஜனா எம்.பி..!samugammedia

Sharmi / Jul 11th 2023, 3:35 pm
image

Advertisement

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான கோவிந்தன் ஜனா கருணாகரம் தலைமையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றின் பிரித்தானியக் கிளையின் நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று லன்டன்  ஹரோவில் அமைந்துள்ள கலந்துரையாடல் மண்டபம் ஒன்றில் இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலானது இலங்கையில் இருந்து வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்இதேசிய அமைப்பாளருமான கோவிந்தன் ஜனா  கருணாகரம் தலைமை தாங்க தமிழீழ விடுதலை இயக்கம் பிரித்தானிய கிளை சார்பாக சாம், ரூபன் ஆகியோரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பிரித்தானிய கிளை சார்பாக சிவபாலன், அல்வின், முகுந்தன் ஆகியோரும்,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாக பிரபு, பரமேஸ், சஜீ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாவால்தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறியபின் மீண்டும்இ புதிதாக இணைந்த கட்சிகளுடன் உருவான புதிய கூட்டின் இன்றைய கள நிலவரங்கள், கூட்டமைப்பின் யாப்பு, நிர்வாக கட்டமைப்பு, எதிர்கால வேலைத் திட்டங்கள், புலம்பெயர் நாடுகளில் இருக்கும் உறவுகள் ஆற்ற வேண்டிய வேலைத்திட்டங்கள், அடுத்த ஆண்டில் சந்திக்க போகும் தேர்தல்கள், தலைமை காரியாலயம் தொடர்பான விடயங்கள், மற்றும் நிதி தொடர்பான விடயங்கள் என பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டது.

அவற்றை உள்வாங்கிய உறுப்பினர்கள் அதற்கான தமது கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் தமது கேள்விகளையும் முன் வைத்து பதில்களையும் ஏற்றுக்கொண்டனர்.

இக் கூட்டத்தில் பங்கு பற்றிய உறுப்பினர்களே பிரித்தானியாவின்தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் என்றும், ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் வருகை தராததால் அடுத்த கூட்டத்தில் அவர்களையும் உள் வாங்கி நிர்வாக கட்டமைப்பை தெரிவு செய்தல் என்ற முடிவு எக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மிகவும் பெறுமதி வாய்ந்த கலந்துரையாடலாக நிறைவேறியது.


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை உறுப்பினர்களை சந்தித்த ஜனா எம்.பி.samugammedia தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான கோவிந்தன் ஜனா கருணாகரம் தலைமையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றின் பிரித்தானியக் கிளையின் நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று லன்டன்  ஹரோவில் அமைந்துள்ள கலந்துரையாடல் மண்டபம் ஒன்றில் இடம் பெற்றது.இக்கலந்துரையாடலானது இலங்கையில் இருந்து வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்இதேசிய அமைப்பாளருமான கோவிந்தன் ஜனா  கருணாகரம் தலைமை தாங்க தமிழீழ விடுதலை இயக்கம் பிரித்தானிய கிளை சார்பாக சாம், ரூபன் ஆகியோரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பிரித்தானிய கிளை சார்பாக சிவபாலன், அல்வின், முகுந்தன் ஆகியோரும்,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாக பிரபு, பரமேஸ், சஜீ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாவால்தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறியபின் மீண்டும்இ புதிதாக இணைந்த கட்சிகளுடன் உருவான புதிய கூட்டின் இன்றைய கள நிலவரங்கள், கூட்டமைப்பின் யாப்பு, நிர்வாக கட்டமைப்பு, எதிர்கால வேலைத் திட்டங்கள், புலம்பெயர் நாடுகளில் இருக்கும் உறவுகள் ஆற்ற வேண்டிய வேலைத்திட்டங்கள், அடுத்த ஆண்டில் சந்திக்க போகும் தேர்தல்கள், தலைமை காரியாலயம் தொடர்பான விடயங்கள், மற்றும் நிதி தொடர்பான விடயங்கள் என பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டது.அவற்றை உள்வாங்கிய உறுப்பினர்கள் அதற்கான தமது கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் தமது கேள்விகளையும் முன் வைத்து பதில்களையும் ஏற்றுக்கொண்டனர்.இக் கூட்டத்தில் பங்கு பற்றிய உறுப்பினர்களே பிரித்தானியாவின்தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் என்றும், ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் வருகை தராததால் அடுத்த கூட்டத்தில் அவர்களையும் உள் வாங்கி நிர்வாக கட்டமைப்பை தெரிவு செய்தல் என்ற முடிவு எக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மிகவும் பெறுமதி வாய்ந்த கலந்துரையாடலாக நிறைவேறியது.

Advertisement

Advertisement

Advertisement