• Jan 24 2025

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவு

Thansita / Jan 23rd 2025, 10:06 pm
image

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதுடன் ஜப்பானில் இலங்கையர்களுக்கான அதிகளவான தொழில்வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா தெரிவித்தார்.

இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.

இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா உள்ளிட்ட தூதுவராலய அதிகாரிகள் குழுவினர் மட்டக்களப்பிலுள்ள பல சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட சமய தலங்களையும் பார்வையிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த தூதுவர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த சுற்றுலாத் தலமாக திகழும் ஒல்லாந்தர் கோட்டையை பார்வையிட்டதுடன், மட்டக்களப்பின் சிறப்பம்சங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தமது விஜயம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதே வேளை குறித்த தூதுவர் உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவு கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதுடன் ஜப்பானில் இலங்கையர்களுக்கான அதிகளவான தொழில்வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா தெரிவித்தார்.இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா உள்ளிட்ட தூதுவராலய அதிகாரிகள் குழுவினர் மட்டக்களப்பிலுள்ள பல சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட சமய தலங்களையும் பார்வையிட்டுள்ளனர்.இதன் போது குறித்த தூதுவர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த சுற்றுலாத் தலமாக திகழும் ஒல்லாந்தர் கோட்டையை பார்வையிட்டதுடன், மட்டக்களப்பின் சிறப்பம்சங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தமது விஜயம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.அதே வேளை குறித்த தூதுவர் உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement