• Oct 29 2025

குறிஞ்சாக்கேணியில் குடைசாய்ந்த ஜேசிபி; தெய்வாதீனமாக உயிர்தப்பிய சாரதி!

shanuja / Oct 28th 2025, 2:45 pm
image

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்துக்கு அருகே ஜேசிபி  இயந்திரம் குடைசாய்ந்து  நீரில் விழுந்துள்ளது


​கிண்ணியாவுக்கும் - குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான படகுப் பாதை சேவை  நேற்று  (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.


ஜேசிபி இயந்திரம் ஊடாக படகுப் பாதையை கடலுக்குள் இறக்க   முற்பட்ட வேளையில் குறித்த சம்பவம் இடம் பெற்றது.


எனினும் குறித்த விபத்துச் சம்பவத்தில் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. 


​கிண்ணியாவுக்கும் - குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான புதிய படகு பாதை சேவையை பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இணைந்து நேற்று ஆரம்பித்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது

குறிஞ்சாக்கேணியில் குடைசாய்ந்த ஜேசிபி; தெய்வாதீனமாக உயிர்தப்பிய சாரதி கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்துக்கு அருகே ஜேசிபி  இயந்திரம் குடைசாய்ந்து  நீரில் விழுந்துள்ளது​கிண்ணியாவுக்கும் - குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான படகுப் பாதை சேவை  நேற்று  (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.ஜேசிபி இயந்திரம் ஊடாக படகுப் பாதையை கடலுக்குள் இறக்க   முற்பட்ட வேளையில் குறித்த சம்பவம் இடம் பெற்றது.எனினும் குறித்த விபத்துச் சம்பவத்தில் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. ​கிண்ணியாவுக்கும் - குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான புதிய படகு பாதை சேவையை பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இணைந்து நேற்று ஆரம்பித்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement