• Apr 25 2025

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து எதிர்க்கட்சி தலைவர் போன்று செயற்படும் ஜனாதிபதி: ஜீவன் குற்றச்சாட்டு..!

Sharmi / Apr 24th 2025, 8:55 am
image

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து எதிர்க்கட்சி தலைவர் போன்று செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் குற்றம் சுமத்தியுள்ளார்.

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்ட பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சார கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் டிக்கோயா, வனராஜா, போடைஸ், பட்டல்கள, கெர்கர்ஸ்வோல்ட், மோரா ஆகிய பகுதிகளில் நேற்று(23) இடம்பெற்றது.


தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் ஜனாதிபதி தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். ஆனால் தற்போது அவர் வாக்குறுதிகளை மறந்து எதிர்கட்சி தலைவர் போன்று செயற்பட்டு வருகின்றார்.

ஜனாதிபதி தேர்தல் காலங்களில் தோட்ட தொழிலாளர்களுக்கு கனிசமான சம்பள அதிகரிப்பை வழங்குவதாக உறுதியாக அறிவித்ததுடன், வரவு செலவு திட்ட வாசிப்பிலும் தெரிவித்திருந்தார். 

ஆனால் தற்போது அனைத்தையும் மறந்து தோட்டக்  கம்பனிகளுடன் கலந்துரையாடி முடியுமான அளவு 1700 ரூபாய் நாட்சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக அறிக்கை விடுத்துள்ளார். இதனை ஏமாற்று நாடகமாகவே புறிந்துக்கொள்ள வேண்டும்.

நான் அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக என்னால் முடிந்தளவிலான வேலைகளை மக்கள் நலனுக்காக செய்திருந்திருந்தேன்.

தற்போது ஜானாதிபதியால் வரவு செலவு திட்டத்தினூடாக மலையகப் பெருந்தோட்ட பகுதிகளுக்கான நிதி ஓதுக்கீட்டில் அநீதி இழைக்கப்பட்ட கண் துடைப்பாகவே காணப்படுகின்றது.

கடந்த வருடத்தில் நாங்கள் அரசாங்கத்தில் இருந்தபோது அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் பெருமளவிலான நிதி ஓதுக்கீடு மேற்கொண்டிருந்ததினை யாரும் மறந்துவிட முடியாது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பானது நிறந்தர தீர்வாக அமையாது, மாறாக நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிறந்தர தீர்வாகும்.

இப்பிரச்சார கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ், முன்னாள் நோர்வூட் பிரதேச சபை தலைவர் குழந்தைவேல் ரவி குறித்த பிரதேசத்தின் உள்ளூராட்சி மன்றம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், காரியாலய உத்தியோகஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து எதிர்க்கட்சி தலைவர் போன்று செயற்படும் ஜனாதிபதி: ஜீவன் குற்றச்சாட்டு. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து எதிர்க்கட்சி தலைவர் போன்று செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் குற்றம் சுமத்தியுள்ளார்.நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்ட பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சார கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் டிக்கோயா, வனராஜா, போடைஸ், பட்டல்கள, கெர்கர்ஸ்வோல்ட், மோரா ஆகிய பகுதிகளில் நேற்று(23) இடம்பெற்றது.தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.நாட்டின் ஜனாதிபதி தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். ஆனால் தற்போது அவர் வாக்குறுதிகளை மறந்து எதிர்கட்சி தலைவர் போன்று செயற்பட்டு வருகின்றார்.ஜனாதிபதி தேர்தல் காலங்களில் தோட்ட தொழிலாளர்களுக்கு கனிசமான சம்பள அதிகரிப்பை வழங்குவதாக உறுதியாக அறிவித்ததுடன், வரவு செலவு திட்ட வாசிப்பிலும் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அனைத்தையும் மறந்து தோட்டக்  கம்பனிகளுடன் கலந்துரையாடி முடியுமான அளவு 1700 ரூபாய் நாட்சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக அறிக்கை விடுத்துள்ளார். இதனை ஏமாற்று நாடகமாகவே புறிந்துக்கொள்ள வேண்டும்.நான் அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக என்னால் முடிந்தளவிலான வேலைகளை மக்கள் நலனுக்காக செய்திருந்திருந்தேன்.தற்போது ஜானாதிபதியால் வரவு செலவு திட்டத்தினூடாக மலையகப் பெருந்தோட்ட பகுதிகளுக்கான நிதி ஓதுக்கீட்டில் அநீதி இழைக்கப்பட்ட கண் துடைப்பாகவே காணப்படுகின்றது.கடந்த வருடத்தில் நாங்கள் அரசாங்கத்தில் இருந்தபோது அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் பெருமளவிலான நிதி ஓதுக்கீடு மேற்கொண்டிருந்ததினை யாரும் மறந்துவிட முடியாது.பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பானது நிறந்தர தீர்வாக அமையாது, மாறாக நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிறந்தர தீர்வாகும்.இப்பிரச்சார கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ், முன்னாள் நோர்வூட் பிரதேச சபை தலைவர் குழந்தைவேல் ரவி குறித்த பிரதேசத்தின் உள்ளூராட்சி மன்றம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், காரியாலய உத்தியோகஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement