• Feb 11 2025

அனர்த்தங்களுக்குள்ளான மக்களை சந்தித்து நிவாரணப் பொதிகளை வழங்கினார் ஜீவன் எம்.பி.

Chithra / Dec 1st 2024, 12:44 pm
image

  

நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்டத்தில்  அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், நிவாரணப் பொதிகயும்  வழங்கி வைத்தார்.

முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான டிக்கோயா, பொகவந்தலாவ, அக்கரபத்தனை ஆகிய பகுதி மக்களுக்கான நிவாரண பொதிகள் நேற்றைய தினம் (30) வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டார்.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் அனுஷா சிவராஜா, போசகர் சிவராஜா, தொழிற்சங்கபிரிவு தேசிய அமைப்பாளர் லோகதாஸ், உபத்தலைவர் சச்சுதானந்தன் காரியாலய உத்தியோகஸ்த்தர்கள் உட்பட பலர் சென்றிருந்தனர்.  


அனர்த்தங்களுக்குள்ளான மக்களை சந்தித்து நிவாரணப் பொதிகளை வழங்கினார் ஜீவன் எம்.பி.   நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்டத்தில்  அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், நிவாரணப் பொதிகயும்  வழங்கி வைத்தார்.முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான டிக்கோயா, பொகவந்தலாவ, அக்கரபத்தனை ஆகிய பகுதி மக்களுக்கான நிவாரண பொதிகள் நேற்றைய தினம் (30) வழங்கி வைக்கப்பட்டது.மேலும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டார்.இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் அனுஷா சிவராஜா, போசகர் சிவராஜா, தொழிற்சங்கபிரிவு தேசிய அமைப்பாளர் லோகதாஸ், உபத்தலைவர் சச்சுதானந்தன் காரியாலய உத்தியோகஸ்த்தர்கள் உட்பட பலர் சென்றிருந்தனர்.  

Advertisement

Advertisement

Advertisement