• Mar 28 2025

மாவடிப்பள்ளி அனர்த்தம் தொடர்பில் ஆரம்பமான தீவிர விசாரணை

Chithra / Dec 1st 2024, 1:02 pm
image

  

மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விபத்து குறித்த விசாரணைகளை  இன்று ஆரம்பித்தார்.

அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனைக்கமைய, கல்முனை பிராந்திய  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் புத்திகவின் வழிகாட்டலில் குறித்த விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையிலான பொலிஸ்  குழுவினர்  விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். 

அத்துடன் காரைதீவு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.

அப்பகுதியில் வெள்ள நிலை ஏற்பட்டபோது சுமார் 5 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெள்ளம் சென்றுள்ளதாகவும், மாணவர்களை ஏற்றி வந்த உழவு இயந்திரம் சுமார் 150 மீற்றர் இயந்திரத்துடன் இணைப்பை துண்டிக்கக் கூடிய வகையில் பெட்டி வேறாக பயணித்திருக்க கூடும் என்ற கோணத்தில் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 26 ஆம் திகதி நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கி  13 பேரை  ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம்   விபத்திற்குள்ளானது.

நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்கள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன்  08 சடலங்கள் மீட்புப் குழுவினரால்  மீட்கப்பட்டு, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சடலங்கள் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர்  மேற்கொண்டிருந்தார்.

பின்னர்  குடும்பத்தினரிடம் சடலங்கள்  கையளிக்கப்பட்டன.

 


மாவடிப்பள்ளி அனர்த்தம் தொடர்பில் ஆரம்பமான தீவிர விசாரணை   மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விபத்து குறித்த விசாரணைகளை  இன்று ஆரம்பித்தார்.அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனைக்கமைய, கல்முனை பிராந்திய  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் புத்திகவின் வழிகாட்டலில் குறித்த விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையிலான பொலிஸ்  குழுவினர்  விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் காரைதீவு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.அப்பகுதியில் வெள்ள நிலை ஏற்பட்டபோது சுமார் 5 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெள்ளம் சென்றுள்ளதாகவும், மாணவர்களை ஏற்றி வந்த உழவு இயந்திரம் சுமார் 150 மீற்றர் இயந்திரத்துடன் இணைப்பை துண்டிக்கக் கூடிய வகையில் பெட்டி வேறாக பயணித்திருக்க கூடும் என்ற கோணத்தில் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கடந்த 26 ஆம் திகதி நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கி  13 பேரை  ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம்   விபத்திற்குள்ளானது.நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்கள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அத்துடன்  08 சடலங்கள் மீட்புப் குழுவினரால்  மீட்கப்பட்டு, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சடலங்கள் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர்  மேற்கொண்டிருந்தார்.பின்னர்  குடும்பத்தினரிடம் சடலங்கள்  கையளிக்கப்பட்டன. 

Advertisement

Advertisement

Advertisement