வடமாகாண கல்வி பணிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் தி.ஜோண் குயின்ரஸ், மத்திய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டு பிரிவின் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இந் நியமனம் நாளை(05) முதல் வழங்கப்பட்டுள்ளது.
1986ம் ஆண்டு அரச சேவையில் ஆசிரியராக இணைந்து அதிபராக, ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக, உதவிக் கல்விப் பணிப்பாளராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக, 4 வலயங்களின் வலயக் கல்வி பணிப்பாளராக, மேலதிக மாகாண கல்வி பணிப்பாளராக பணியாற்றியிருந்த நிலையில், தற்போது மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.
இவர் கடந்த 01.01.2024 முதல் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு தேசிய பொதுச் சேவை ஆணைக்குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டு பிரிவின் பணிப்பாளர் நாயகமாக ஜோண் குயின்ரஸ் நியமனம். வடமாகாண கல்வி பணிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் தி.ஜோண் குயின்ரஸ், மத்திய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டு பிரிவின் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இந் நியமனம் நாளை(05) முதல் வழங்கப்பட்டுள்ளது.1986ம் ஆண்டு அரச சேவையில் ஆசிரியராக இணைந்து அதிபராக, ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக, உதவிக் கல்விப் பணிப்பாளராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக, 4 வலயங்களின் வலயக் கல்வி பணிப்பாளராக, மேலதிக மாகாண கல்வி பணிப்பாளராக பணியாற்றியிருந்த நிலையில், தற்போது மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.இவர் கடந்த 01.01.2024 முதல் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு தேசிய பொதுச் சேவை ஆணைக்குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.