• Nov 23 2024

இலங்கை பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு..! மீண்டும் ஆரம்பிக்கப்படும் திட்டங்கள்

Chithra / Jul 19th 2024, 8:17 am
image

 

ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் இசுமி ஹிரோடோ (Izumi Hiroto) தெரிவித்தார்.

ஜப்பானிய உயர்மட்டக் குழுவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இசுமி ஹிரோடோ  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவில் இணைந்து மிகக் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் மீது சர்வதேச சமூகம் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தி நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், கொழும்பு துறைமுக கிழக்கு அபிவிருத்தித் திட்டம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் மற்றும் தொலைக்காட்சி டிஜிட்டல் ஒளிபரப்புத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக மீள ஆரம்பிக்க முடியும் என ஜப்பானிய பிரதிநிதிகள் இங்கு தெரிவித்தனர்.

ஜப்பானில் மின்சார விநியோகத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பானில் தனியார் துறையில் கிடைக்கும் தொழில் வாய்ப்புகளுக்கு தொழில்நுட்ப துறையில் இலங்கை பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த தயாராக இருப்பதாகவும் ஜப்பானிய பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு. மீண்டும் ஆரம்பிக்கப்படும் திட்டங்கள்  ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் இசுமி ஹிரோடோ (Izumi Hiroto) தெரிவித்தார்.ஜப்பானிய உயர்மட்டக் குழுவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இசுமி ஹிரோடோ  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவில் இணைந்து மிகக் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் மீது சர்வதேச சமூகம் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.விவசாய நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தி நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், கொழும்பு துறைமுக கிழக்கு அபிவிருத்தித் திட்டம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் மற்றும் தொலைக்காட்சி டிஜிட்டல் ஒளிபரப்புத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக மீள ஆரம்பிக்க முடியும் என ஜப்பானிய பிரதிநிதிகள் இங்கு தெரிவித்தனர்.ஜப்பானில் மின்சார விநியோகத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பானில் தனியார் துறையில் கிடைக்கும் தொழில் வாய்ப்புகளுக்கு தொழில்நுட்ப துறையில் இலங்கை பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த தயாராக இருப்பதாகவும் ஜப்பானிய பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement