• Jan 13 2025

ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலைக்கு நீதியைத் தாருங்கள் - பாராளுமன்றில் அரசிடம் சஜித் கோரிக்கை

Tharmini / Jan 9th 2025, 9:54 am
image

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்றன. இப்போதாவது உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுங்கள்.

 இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,  சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இந்தக் கொலைக்கான மூல காரணத்தையும், கொலைகாரர்களையும் இதுவரை எந்த அரசாலும் கண்டுபிடிக்க முடியாதுபோயுள்ளன. இந்த விவகாரத்தை அவரது மகள் அஹிம்சா விக்கிரமதுங்க ஐக்கிய நாடுகள் சபையிடம் எடுத்துச் சென்றுள்ளார்.

அத்துடன், சிரச ஊடக வலையமைப்பின் மீதான கொடூரத் தாக்குதல் இடம்பெற்றும் 16 வருடங்கள் கடந்துள்ளன. லசந்த விக்கிரமதுங்க மற்றும் இராஜமகேந்திரன் ஆகியோர் நீதி மற்றும் நியாயத்திற்காக முன் நின்றார்கள். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுங்கள். - என்றார்.

ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலைக்கு நீதியைத் தாருங்கள் - பாராளுமன்றில் அரசிடம் சஜித் கோரிக்கை சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்றன. இப்போதாவது உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுங்கள். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,  சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இந்தக் கொலைக்கான மூல காரணத்தையும், கொலைகாரர்களையும் இதுவரை எந்த அரசாலும் கண்டுபிடிக்க முடியாதுபோயுள்ளன. இந்த விவகாரத்தை அவரது மகள் அஹிம்சா விக்கிரமதுங்க ஐக்கிய நாடுகள் சபையிடம் எடுத்துச் சென்றுள்ளார்.அத்துடன், சிரச ஊடக வலையமைப்பின் மீதான கொடூரத் தாக்குதல் இடம்பெற்றும் 16 வருடங்கள் கடந்துள்ளன. லசந்த விக்கிரமதுங்க மற்றும் இராஜமகேந்திரன் ஆகியோர் நீதி மற்றும் நியாயத்திற்காக முன் நின்றார்கள். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுங்கள். - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement