எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றியீட்டுவார் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதமளவில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரவிற்கு 50 வீத மக்கள் ஆதரவு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் தலைமையில் மாற்றத்தைக் கொண்டு வராது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காண முடியாது.
தமது கட்சியின் செயற்பாடுகள் குறித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நன்மதிப்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர்,
மக்கள் விரோத சக்திகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி சேரப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது ஜேவிபி வேட்பாளரே. கருத்துக் கணிப்பில் தகவல் என்கிறார் பிமல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றியீட்டுவார் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த நவம்பர் மாதமளவில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரவிற்கு 50 வீத மக்கள் ஆதரவு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.மேலும் அரசியல் தலைமையில் மாற்றத்தைக் கொண்டு வராது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காண முடியாது.தமது கட்சியின் செயற்பாடுகள் குறித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நன்மதிப்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர்,மக்கள் விரோத சக்திகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி சேரப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.