• Nov 23 2024

இந்திய முதலீடுகளை இழந்தமைக்கு ஜே.வி.பியே முக்கிய காரணம்..! நாமல் விசனம்

Chithra / Feb 7th 2024, 7:50 am
image

 

இலங்கைக்கான கடந்த காலங்களில் பல இந்திய முதலீடுகளையும், முதலீட்டாளர்களையும் இழந்தமைக்கு ஜே.வி.பியே முக்கிய காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய எதிர்ப்பு கொள்கையை கடந்தகாலங்களில் பின்பற்றிய ஜே.வி.பியின் இந்திய விஜயமானது கேள்விகளை தோற்றுவித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் இந்திய விரோத கொள்கைகளின் விளைவாக நாடு எதிர்கொண்ட இழப்பிற்கு சம்பூர் மின் திட்டம் ஒரு உதாரணமாகும்.

எனினும், ஜே.வி.பி. இப்போது வேறு ஒரு பார்வையை அடைந்து, இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளது. 


இது ஒரு நல்ல விடயம். அனுர தரப்பின் இந்திய விஜயத்தை தொடர்ந்து, இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களுக்கு அந்த கட்சி ஆதரவளிக்கும் என நம்புகிறேன் என்றார்.


இந்திய முதலீடுகளை இழந்தமைக்கு ஜே.வி.பியே முக்கிய காரணம். நாமல் விசனம்  இலங்கைக்கான கடந்த காலங்களில் பல இந்திய முதலீடுகளையும், முதலீட்டாளர்களையும் இழந்தமைக்கு ஜே.வி.பியே முக்கிய காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.இந்திய எதிர்ப்பு கொள்கையை கடந்தகாலங்களில் பின்பற்றிய ஜே.வி.பியின் இந்திய விஜயமானது கேள்விகளை தோற்றுவித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.ஜே.வி.பியின் இந்திய விரோத கொள்கைகளின் விளைவாக நாடு எதிர்கொண்ட இழப்பிற்கு சம்பூர் மின் திட்டம் ஒரு உதாரணமாகும்.எனினும், ஜே.வி.பி. இப்போது வேறு ஒரு பார்வையை அடைந்து, இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளது. இது ஒரு நல்ல விடயம். அனுர தரப்பின் இந்திய விஜயத்தை தொடர்ந்து, இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களுக்கு அந்த கட்சி ஆதரவளிக்கும் என நம்புகிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement