எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயாதீன வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நாடு முழுவதும் இன்று(07) காலை பிரச்சாரப் பணிகள் சம நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
அதற்கமைவாக, வவுனியா நகரப் பகுதியில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நகரப் பகுதியில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,
ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கு எமது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதை அவதானிக்கின்றோம்.
அவர் அதிகப் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார். அதற்கான சந்தர்ப்பமே இருக்கின்றது. வீழ்ச்சியடைந்த நாட்டை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அவர் மிக விரைவாக எமது நாட்டை மீட்டிருந்தார் எனவும் தெரிவித்தார்.
ரணிலுக்கு ஆதரவாக வவுனியாவில் காதர் மஸ்தான் பிரச்சாரம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயாதீன வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நாடு முழுவதும் இன்று(07) காலை பிரச்சாரப் பணிகள் சம நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டன.அதற்கமைவாக, வவுனியா நகரப் பகுதியில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நகரப் பகுதியில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கு எமது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதை அவதானிக்கின்றோம். அவர் அதிகப் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார். அதற்கான சந்தர்ப்பமே இருக்கின்றது. வீழ்ச்சியடைந்த நாட்டை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அவர் மிக விரைவாக எமது நாட்டை மீட்டிருந்தார் எனவும் தெரிவித்தார்.