• Sep 08 2024

வவுனியா பிரதேச செயலக கலாசார விழாவில் துறை சார்ந்த ஒன்பது பேருக்கு கலாநேத்ரா விருது...!samugammedia

Sharmi / Dec 15th 2023, 2:48 pm
image

Advertisement

வவுனியா பிரதேச செயலக கலாசார விழாவில் துறை சார்ந்த ஒன்பது பேருக்கு கலாநேத்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்

வவவுனியா பிரதேச செயலகமும், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், வவுனியா பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த வவுனியா பிரதேச கலாசார பெருவிழா நேற்றையதினம் (14.12.2023) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா பிரதேசத்தில் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிய துறை சார்ந்த ஒன்பது பேருக்கு கலாநேத்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், வவுனியா பிரதேசத்தில் கலைத்துறையில் கவிதை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிவரும் கலாபூசணம் நாகலிங்கம் தியாகராஜா அவர்களிற்கு கவிதை துறைக்கான கலாநேத்ரா விருதும், கலாபூசணம் செந்தில்மதி பரமசிவராஜா அவர்கட்கு வாத்திய இசைக்கான கலாநேத்ரா விருதும், சிதம்பரப்பிள்ளை வரதராஜன் அவர்களுக்கு இயலுக்கான கலாநேத்ரா விருதும், கந்தையா ஸ்ரீ கந்தவேள் அவர்களுக்கு நாடக எழுத்துருக்கான கலாநேத்ரா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு வவுனியா பிரதேசத்தில் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிவரும் பண்டிதர் வீரசிங்கம் பிரதீபன் அவர்களுக்கு கட்டுரைக்கான கலாநேத்ரா விருதும், சோமரட்ணம் ஜெயச்சந்திரன் அவர்களுக்கு மெல்லிசைக்கான கலாநேத்ரா விருதும், விஷ்ணுராஜ் விஜயகுமார் அவர்களுக்கு நாடக இலக்கியத்துக்கான கலாநேத்ரா விருதும், சர்மினி டனிஸ்கரன் அவர்களுக்கு நடனத்துக்கான கலாநேத்ரா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .

அத்தோடு வவுனியா பிரதேசத்தில் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிவரும் பாலநாதன் சதீசன் அவர்களுக்கு ஊடகத்துறைக்கான கலாநேத்ரா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தனராக ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக உத்தியோகத்தர் கலாபூசணம் கந்தையா ஐயம்பிள்ளை, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் பிரதிப்பணிப்பாளர் லாகினி நிருபராஜ், வவுனியா பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், கலாசார பேரவை குழுவினரால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதோடு நினைவுக்கேடயம், சான்றிதழ் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


வவுனியா பிரதேச செயலக கலாசார விழாவில் துறை சார்ந்த ஒன்பது பேருக்கு கலாநேத்ரா விருது.samugammedia வவுனியா பிரதேச செயலக கலாசார விழாவில் துறை சார்ந்த ஒன்பது பேருக்கு கலாநேத்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்வவவுனியா பிரதேச செயலகமும், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், வவுனியா பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த வவுனியா பிரதேச கலாசார பெருவிழா நேற்றையதினம் (14.12.2023) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா பிரதேசத்தில் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிய துறை சார்ந்த ஒன்பது பேருக்கு கலாநேத்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில், வவுனியா பிரதேசத்தில் கலைத்துறையில் கவிதை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிவரும் கலாபூசணம் நாகலிங்கம் தியாகராஜா அவர்களிற்கு கவிதை துறைக்கான கலாநேத்ரா விருதும், கலாபூசணம் செந்தில்மதி பரமசிவராஜா அவர்கட்கு வாத்திய இசைக்கான கலாநேத்ரா விருதும், சிதம்பரப்பிள்ளை வரதராஜன் அவர்களுக்கு இயலுக்கான கலாநேத்ரா விருதும், கந்தையா ஸ்ரீ கந்தவேள் அவர்களுக்கு நாடக எழுத்துருக்கான கலாநேத்ரா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.அத்தோடு வவுனியா பிரதேசத்தில் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிவரும் பண்டிதர் வீரசிங்கம் பிரதீபன் அவர்களுக்கு கட்டுரைக்கான கலாநேத்ரா விருதும், சோமரட்ணம் ஜெயச்சந்திரன் அவர்களுக்கு மெல்லிசைக்கான கலாநேத்ரா விருதும், விஷ்ணுராஜ் விஜயகுமார் அவர்களுக்கு நாடக இலக்கியத்துக்கான கலாநேத்ரா விருதும், சர்மினி டனிஸ்கரன் அவர்களுக்கு நடனத்துக்கான கலாநேத்ரா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .அத்தோடு வவுனியா பிரதேசத்தில் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிவரும் பாலநாதன் சதீசன் அவர்களுக்கு ஊடகத்துறைக்கான கலாநேத்ரா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இந்நிகழ்வில் பிரதம விருந்தனராக ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக உத்தியோகத்தர் கலாபூசணம் கந்தையா ஐயம்பிள்ளை, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் பிரதிப்பணிப்பாளர் லாகினி நிருபராஜ், வவுனியா பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், கலாசார பேரவை குழுவினரால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதோடு நினைவுக்கேடயம், சான்றிதழ் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement