• Nov 24 2024

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்-49 ஆவது நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக முன்னெடுப்பு..!!

Tamil nila / May 12th 2024, 7:06 pm
image

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் எதிராகவும் நிருவாக உரிமையை மீட்பதற்காகவும் மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தின் 50 வது நாளுக்காக பிரதேச செயலக முன்றலில்  இன்று (12) ஞாயிற்றுக்கிழமை 49 ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி   கவனயீர்ப்பு  போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


குறித்த  பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம்  திங்கட்கிழமை(25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய  பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.



அதன் தொடர்ச்சியாக, 49 ஆவது நாளான இன்று  பல்வேறு சுலோகங்களை முன்வைத்து சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் குறித்த பிரதேச செயலக முன்றலில் ஒன்று கூடி கல்முனை நகரை நோக்கி  பேரணியுடன் கவனயீர்ப்பு  போராட்டத்தை தொடர்ந்து பின்னர் நிறைவு செய்தனர்.  இதன் போது அரசியல்வாதிகள் உயர் அரச அதிகாரிகளின் உருவ பொம்மைகளும் பேரணியில் எடுத்து செல்லப்பட்டு இறுதியாக திருஸ்டி  களிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 மேலும் கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம்   1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆண்டு  அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்-49 ஆவது நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக முன்னெடுப்பு. கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் எதிராகவும் நிருவாக உரிமையை மீட்பதற்காகவும் மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தின் 50 வது நாளுக்காக பிரதேச செயலக முன்றலில்  இன்று (12) ஞாயிற்றுக்கிழமை 49 ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி   கவனயீர்ப்பு  போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.குறித்த  பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம்  திங்கட்கிழமை(25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய  பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.அதன் தொடர்ச்சியாக, 49 ஆவது நாளான இன்று  பல்வேறு சுலோகங்களை முன்வைத்து சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் குறித்த பிரதேச செயலக முன்றலில் ஒன்று கூடி கல்முனை நகரை நோக்கி  பேரணியுடன் கவனயீர்ப்பு  போராட்டத்தை தொடர்ந்து பின்னர் நிறைவு செய்தனர்.  இதன் போது அரசியல்வாதிகள் உயர் அரச அதிகாரிகளின் உருவ பொம்மைகளும் பேரணியில் எடுத்து செல்லப்பட்டு இறுதியாக திருஸ்டி  களிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம்   1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆண்டு  அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement