• Nov 23 2024

கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு..!

Sharmi / Sep 12th 2024, 1:21 pm
image

புத்தளம், மதுரங்குளி - கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி எம்.எம்.முபா தமிழ் மொழி தினப் போட்டியில் கலந்துகொண்டு பாவோதல் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

புத்தளம் வலய மட்ட தமிழ் மொழி தினப்போட்டி நிகழ்ச்சிகள் கடந்த மாதம் நடைபெற்ற போது, குறித்த போட்டியில் 4 ஆம் பிரிவில் வலய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று, மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகியிருந்தார்.

இந்த நிலையில், வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் உள்ள தமிழ் மொழிப்பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி தமிழ் மொழி தினப் போட்டிகள் நேற்று (11) குருநாகல் , தெலியாகொன்ன ஹிஸ்புல்லா மத்தியக் கல்லூரியில் இடம்பெற்றது.

இதன்போது, கணமூலை பாடசாலையில் கல்வி கற்கும் எம்.எம்.முபா என்ற மாணவி பாவோதல் நான்காம் பிரிவுப் போட்டியில் பிரிவு 4ல் நடைபெற்ற பாவோதல்  போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தைப்பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

குறித்த மாணவிக்கும், அவருக்கு பயிற்றுவித்த  ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களையும்,  பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதோடு அம்மாணவி தேசிய மட்டத்திலும் வெற்றிபெற பிராத்திக்கின்றோம் என பாடசாலை அதிபர் பீ.எம்.முஸ்னி தெரிவித்தார்.

கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு. புத்தளம், மதுரங்குளி - கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி எம்.எம்.முபா தமிழ் மொழி தினப் போட்டியில் கலந்துகொண்டு பாவோதல் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.புத்தளம் வலய மட்ட தமிழ் மொழி தினப்போட்டி நிகழ்ச்சிகள் கடந்த மாதம் நடைபெற்ற போது, குறித்த போட்டியில் 4 ஆம் பிரிவில் வலய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று, மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகியிருந்தார்.இந்த நிலையில், வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் உள்ள தமிழ் மொழிப்பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி தமிழ் மொழி தினப் போட்டிகள் நேற்று (11) குருநாகல் , தெலியாகொன்ன ஹிஸ்புல்லா மத்தியக் கல்லூரியில் இடம்பெற்றது.இதன்போது, கணமூலை பாடசாலையில் கல்வி கற்கும் எம்.எம்.முபா என்ற மாணவி பாவோதல் நான்காம் பிரிவுப் போட்டியில் பிரிவு 4ல் நடைபெற்ற பாவோதல்  போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தைப்பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். குறித்த மாணவிக்கும், அவருக்கு பயிற்றுவித்த  ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களையும்,  பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதோடு அம்மாணவி தேசிய மட்டத்திலும் வெற்றிபெற பிராத்திக்கின்றோம் என பாடசாலை அதிபர் பீ.எம்.முஸ்னி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement