• Nov 23 2024

கிண்ணியாவில் சிதைவடைந்துள்ள கண்டல்காடு பிரதான வீதி...! போக்குவரத்து சிக்கலில் விவசாயிகள்...!

Sharmi / May 30th 2024, 1:15 pm
image

கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட கண்டல்காடு பிரதான வீதி நீண்டகாலமாக திருத்தப்படாத நிலையில் இருப்பதால், பல விவசாய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக, அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சுமார் நான்கு கிலோமீட்டர் நீளம் கொண்ட இவ் வீதி, கண்டல்காடு, கிரான், சின்னக்ரான் மற்றும் பக்கிறான்வெட்டை ஆகிய விவசாய கிராமங்களை இணைக்கின்ற ஒரு பிரதான போக்குவரத்து   மார்க்கமாக காணப்படும் அதேவேளை குறித்த  வீதி, பிரயாணம் செய்ய முடியாத வீதியாக சிதைவடைந்து காணப்படுகின்றது .

உள்நாட்டு யுத்தம் காரணமாக, 1990 ஆம் ஆண்டு, இந்த கிராமங்களில் இருந்து மக்கள் முழுமையாக குடி பெயர்ந்ததுடன்  யுத்தம் முடிந்த பின்னர், இவர்கள் மீள் குடியேற்றப்பட்ட போதும், போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும்  இதுவரை பூரணமாக செய்து கொடுக்கப்படவில்லை என குறித்த  கிராம  மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மகாவலி ஆறு சங்கமிக்கின்ற, கிண்ணியா கொட்டியாரக்குடாவை அண்மித்து நீரேந்து பகுதியில் இந்த கிராமங்கள் அமைந்திருப்பதனால், இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வேளாண்மை செய்யப்படுவதுடன் அவற்றை களஞ்சியசாலைகளுக்கு எடுத்துச் சென்று சந்தைப்படுத்துவதற்கு, போக்குவரத்து சேவையை  சீர் செய்துதருமாறு கிராம மக்கள் கோருகின்றனர்.

இதேவேளை, மணல் மாபியாக்களால், இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற, சட்ட விரோத மணல் அகழ்வுக்காக நாளாந்தம் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் இந்த வீதியை பயன்படுத்திவருவதனால் குறித்த  வீதி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கிராமவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எனவே, உடனடியாக இந்த வீதியை செப்பனிட்டு, அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.


கிண்ணியாவில் சிதைவடைந்துள்ள கண்டல்காடு பிரதான வீதி. போக்குவரத்து சிக்கலில் விவசாயிகள். கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட கண்டல்காடு பிரதான வீதி நீண்டகாலமாக திருத்தப்படாத நிலையில் இருப்பதால், பல விவசாய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக, அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.சுமார் நான்கு கிலோமீட்டர் நீளம் கொண்ட இவ் வீதி, கண்டல்காடு, கிரான், சின்னக்ரான் மற்றும் பக்கிறான்வெட்டை ஆகிய விவசாய கிராமங்களை இணைக்கின்ற ஒரு பிரதான போக்குவரத்து   மார்க்கமாக காணப்படும் அதேவேளை குறித்த  வீதி, பிரயாணம் செய்ய முடியாத வீதியாக சிதைவடைந்து காணப்படுகின்றது .உள்நாட்டு யுத்தம் காரணமாக, 1990 ஆம் ஆண்டு, இந்த கிராமங்களில் இருந்து மக்கள் முழுமையாக குடி பெயர்ந்ததுடன்  யுத்தம் முடிந்த பின்னர், இவர்கள் மீள் குடியேற்றப்பட்ட போதும், போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும்  இதுவரை பூரணமாக செய்து கொடுக்கப்படவில்லை என குறித்த  கிராம  மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.மகாவலி ஆறு சங்கமிக்கின்ற, கிண்ணியா கொட்டியாரக்குடாவை அண்மித்து நீரேந்து பகுதியில் இந்த கிராமங்கள் அமைந்திருப்பதனால், இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வேளாண்மை செய்யப்படுவதுடன் அவற்றை களஞ்சியசாலைகளுக்கு எடுத்துச் சென்று சந்தைப்படுத்துவதற்கு, போக்குவரத்து சேவையை  சீர் செய்துதருமாறு கிராம மக்கள் கோருகின்றனர்.இதேவேளை, மணல் மாபியாக்களால், இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற, சட்ட விரோத மணல் அகழ்வுக்காக நாளாந்தம் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் இந்த வீதியை பயன்படுத்திவருவதனால் குறித்த  வீதி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கிராமவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.எனவே, உடனடியாக இந்த வீதியை செப்பனிட்டு, அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement