• Nov 14 2024

யாழில் பூங்காவன உற்சவத்தில் 1008 பழங்களால் அலங்கரிக்கப்பட்ட கண்ணகியம்மன்...!

Sharmi / Jul 24th 2024, 8:44 am
image

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் கோப்பாய் கோவையம்பதி பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த பூங்காவனத் திருவிழா நேற்றையதினம்(23) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ கோவையம்பதி பலானை கண்ணகை அம்மனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றது. 

அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அருள் பாலித்து விளங்கும் கண்ணகியம்மனுக்கு 1008 பழங்களினாலான அலங்கார திருவாசியிலான மாலை அணிவிக்கப்பட்டு, அம்பாள் எழுந்தருளி உள்வீதி ஊடாக வலம் வந்து பூந்தண்டிகை வாகனத்தில் வீற்று வெளிவீதியுடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பூங்காவனத் திருவிழாவை காண பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


யாழில் பூங்காவன உற்சவத்தில் 1008 பழங்களால் அலங்கரிக்கப்பட்ட கண்ணகியம்மன். வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் கோப்பாய் கோவையம்பதி பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த பூங்காவனத் திருவிழா நேற்றையதினம்(23) பக்திபூர்வமாக இடம்பெற்றது.கருவறையில் அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ கோவையம்பதி பலானை கண்ணகை அம்மனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அருள் பாலித்து விளங்கும் கண்ணகியம்மனுக்கு 1008 பழங்களினாலான அலங்கார திருவாசியிலான மாலை அணிவிக்கப்பட்டு, அம்பாள் எழுந்தருளி உள்வீதி ஊடாக வலம் வந்து பூந்தண்டிகை வாகனத்தில் வீற்று வெளிவீதியுடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பூங்காவனத் திருவிழாவை காண பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement