• Nov 28 2024

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டி கிளிநொச்சியில் ஆரம்பம்..!

Sharmi / Oct 12th 2024, 4:08 pm
image

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டி கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத் தொகுதியின் உள்ளக அரங்கில் இன்று(12) ஆரம்பமாகியது.

எதிர்வரும் 14ம் திகதி வரை குறித்த போட்டி நடைபெறவுள்ளது.

ஒன்பது மாகாணங்களிலும் வெற்றி பெற்ற  900பேர் வரையான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆண் ,பெண் என 16வயது மற்றும் 18வயதுப்பிரிவு, 20வயதுப்பிரிவு என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது.

தனிக்காட்டா குழுகாட்டா , சண்டைகாட்டா  என போட்டிகள் நடைபெறவுள்ளன.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரதமவிருந்தினராக கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் க.அ.சிவனருள்ராஜா கலந்து கொண்டார்.

குறித்த ஆரம்பநிகழ்வில் வடமாகாண மாகாண விளையாட்டு திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர்  ராஜகோபால் ராஜசீலன்,இலங்கை பாடசாலைகள்  காராத்தே சங்க தலைவர் டபுல்யூ -அனுரசாந்  செயலாளர் அரோசன் நிஷங்க, இலங்கை கராத்தே நடுவர் சங்க தலைவர் ,கல்வியமைச்சின் விளையாட்டு பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.




அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டி கிளிநொச்சியில் ஆரம்பம். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டி கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத் தொகுதியின் உள்ளக அரங்கில் இன்று(12) ஆரம்பமாகியது. எதிர்வரும் 14ம் திகதி வரை குறித்த போட்டி நடைபெறவுள்ளது. ஒன்பது மாகாணங்களிலும் வெற்றி பெற்ற  900பேர் வரையான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.ஆண் ,பெண் என 16வயது மற்றும் 18வயதுப்பிரிவு, 20வயதுப்பிரிவு என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது. தனிக்காட்டா குழுகாட்டா , சண்டைகாட்டா  என போட்டிகள் நடைபெறவுள்ளன.இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரதமவிருந்தினராக கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் க.அ.சிவனருள்ராஜா கலந்து கொண்டார்.குறித்த ஆரம்பநிகழ்வில் வடமாகாண மாகாண விளையாட்டு திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர்  ராஜகோபால் ராஜசீலன்,இலங்கை பாடசாலைகள்  காராத்தே சங்க தலைவர் டபுல்யூ -அனுரசாந்  செயலாளர் அரோசன் நிஷங்க, இலங்கை கராத்தே நடுவர் சங்க தலைவர் ,கல்வியமைச்சின் விளையாட்டு பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement