முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா முன்னெடுத்த புரட்சிகர அமைப்பு தூரதிர்ஷ்டம். ஆதலால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவாவது நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கும் வகையில் புதிய அரசமைப்பை உருவாக்கவேண்டும் என முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் உருவாக்கப்பட்ட புதிய அரசமைப்பு அன்று நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று நாடு பெரியளவில் முன்னேற்றம் அடைந்திருக்கும்.
புதிய அரசமைப்பை உருவாக்கி தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை சந்திரிகா முன்னெடுத்தார்.
ஆனால், இன்று அதைப் பலரும் மறந்துள்ளனர். அரசமைப்புப் பேச்சுகளுக்காக 21 கூட்டங்களை சந்திரிகா நடத்தியிருக்கின்றார்.
அவற்றில் நானும் பங்கேற்றிருக்கின்றேன். அந்த அரசமைப்பு முயற்சிக்கு எந்தவொரு அரசியல்வாதியும் எதிர்ப்பை வெளியிடவில்லை.
அன்று அந்த அரசமைப்பு நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று நாடு இன்னொரு கட்டத்துக்குச் சென்றிருக்கும் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். ஆனால் அந்த முயற்சி நிறை வேறாது போனமை எமது நாட்டின் துரதிர்ஷ்டமாகும்.
புதிய ஜனாதிபத் தற்போதாவது அதனை செய்வார் என நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
அநுர புதிய அரசமைப்பை செயற்படுத்த வேண்டும்; கரு ஜயசூரிய வலியுறுத்து. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா முன்னெடுத்த புரட்சிகர அமைப்பு தூரதிர்ஷ்டம். ஆதலால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவாவது நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கும் வகையில் புதிய அரசமைப்பை உருவாக்கவேண்டும் என முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் உருவாக்கப்பட்ட புதிய அரசமைப்பு அன்று நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று நாடு பெரியளவில் முன்னேற்றம் அடைந்திருக்கும். புதிய அரசமைப்பை உருவாக்கி தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை சந்திரிகா முன்னெடுத்தார். ஆனால், இன்று அதைப் பலரும் மறந்துள்ளனர். அரசமைப்புப் பேச்சுகளுக்காக 21 கூட்டங்களை சந்திரிகா நடத்தியிருக்கின்றார்.அவற்றில் நானும் பங்கேற்றிருக்கின்றேன். அந்த அரசமைப்பு முயற்சிக்கு எந்தவொரு அரசியல்வாதியும் எதிர்ப்பை வெளியிடவில்லை. அன்று அந்த அரசமைப்பு நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று நாடு இன்னொரு கட்டத்துக்குச் சென்றிருக்கும் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். ஆனால் அந்த முயற்சி நிறை வேறாது போனமை எமது நாட்டின் துரதிர்ஷ்டமாகும். புதிய ஜனாதிபத் தற்போதாவது அதனை செய்வார் என நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.