• Nov 23 2024

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

Tamil nila / Feb 23rd 2024, 9:25 pm
image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 


கொடியேற்றத்தை தொடர்ந்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. 

திருவிழாத் திருப்பலி  நிகழ்வு நாளை(24) காலை  7 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.



இத் திருவிழாவிற்கு இலங்கையிலிருந்து பெருமளவு  பக்தர்கள் வருகை தந்துள்ளதுடன்   இந்தியாவிலிருந்து பக்தர்கள் வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதேவேளை  பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.




கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கொடியேற்றத்தை தொடர்ந்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. திருவிழாத் திருப்பலி  நிகழ்வு நாளை(24) காலை  7 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.இத் திருவிழாவிற்கு இலங்கையிலிருந்து பெருமளவு  பக்தர்கள் வருகை தந்துள்ளதுடன்   இந்தியாவிலிருந்து பக்தர்கள் வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை  பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement