கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க காணமால் போயுள்ளதாக அவரது மகள்களும் மற்றுமொரு குடும்ப உறவினரும் கதிர்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் அவருடைய மகள்கள் மேலும் தெரிவிக்கையில், தந்தை சமீபத்தில் தனது மூத்த சகோதரி ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதன் பின்னர் இதுவரை அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முறைப்பாட்டாளரும், பிரதிவாதிகளும் குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இன்று பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டனர்..
எனினும் நாளை கதிர்காமம் பொலிஸ் நிலையத்திற்கு வரவுள்ளதாக பிரதிவாதிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
குறித்த இதே வேளை பிரபல பாதாள குழு உறுப்பினரான அங்கொட லொக்காவின் மனைவியால் கதிர்காமம் ஆலயத்திற்கு வழங்கிய 38 பவுண் தங்க தகடு காணாமற் போனதையடுத்து, ஆலயத்தின் தலைவர் பிரதான பூசகர் காணாமல் போயுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தை விசாரணை செய்த குழுவினர், கதிர்காமம் ஆலயத்தின் களஞ்சியசாலை காப்பாளராக இருந்த சுட்டி கபுரல என்பவரை கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கதிர்காம ஆலய பிரதான பூசகர் மாயமானார்.samugammedia கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க காணமால் போயுள்ளதாக அவரது மகள்களும் மற்றுமொரு குடும்ப உறவினரும் கதிர்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.குறித்த விடயம் தொடர்பில் அவருடைய மகள்கள் மேலும் தெரிவிக்கையில், தந்தை சமீபத்தில் தனது மூத்த சகோதரி ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதன் பின்னர் இதுவரை அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், முறைப்பாட்டாளரும், பிரதிவாதிகளும் குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இன்று பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டனர்.எனினும் நாளை கதிர்காமம் பொலிஸ் நிலையத்திற்கு வரவுள்ளதாக பிரதிவாதிகள் தரப்பு தெரிவித்துள்ளது.குறித்த இதே வேளை பிரபல பாதாள குழு உறுப்பினரான அங்கொட லொக்காவின் மனைவியால் கதிர்காமம் ஆலயத்திற்கு வழங்கிய 38 பவுண் தங்க தகடு காணாமற் போனதையடுத்து, ஆலயத்தின் தலைவர் பிரதான பூசகர் காணாமல் போயுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தை விசாரணை செய்த குழுவினர், கதிர்காமம் ஆலயத்தின் களஞ்சியசாலை காப்பாளராக இருந்த சுட்டி கபுரல என்பவரை கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.