• Dec 04 2024

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த கஜகஸ்தான்..! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

Chithra / Dec 7th 2023, 10:56 am
image

 

கொழும்பு மற்றும் கஜகஸ்தானுக்கும் இடையிலான விமான சேவையை ஏர் அஸ்தானா விமான சேவை நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இருநாடுகளுக்குமிடையில் வாரந்தோறும் நான்கு நேரடி விமான சேவைகள் இடம்பெறும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விமானம் 165 சர்வதேச சுற்றுலாப் பயணிகளுடன் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  வந்தடைந்த போது சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் விமான குழுவினரையும் சுற்றுலா பயணிகளையும் வரவேற்க பாரம்பரிய நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில், ஏர் அஸ்தானா விமான சேவை நிறுவனம் கஜகஸ்தானுக்கும் கொழும்புக்கும் இடையில் வாரந்தோறும் நான்கு நேரடி விமான சேவைகளை இயக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த கஜகஸ்தான். மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்  கொழும்பு மற்றும் கஜகஸ்தானுக்கும் இடையிலான விமான சேவையை ஏர் அஸ்தானா விமான சேவை நிறுவனம் ஆரம்பித்துள்ளது.இருநாடுகளுக்குமிடையில் வாரந்தோறும் நான்கு நேரடி விமான சேவைகள் இடம்பெறும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த விமானம் 165 சர்வதேச சுற்றுலாப் பயணிகளுடன் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  வந்தடைந்த போது சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டிருந்தது.அத்துடன், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் விமான குழுவினரையும் சுற்றுலா பயணிகளையும் வரவேற்க பாரம்பரிய நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.இந்நிலையில், ஏர் அஸ்தானா விமான சேவை நிறுவனம் கஜகஸ்தானுக்கும் கொழும்புக்கும் இடையில் வாரந்தோறும் நான்கு நேரடி விமான சேவைகளை இயக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement